இந்தியாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.
சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கை வந்து சென்றமை குறித்து இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.
இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் பதற்றத்தை கொண்டு வரும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது.
எனினும் சீனாவின் இந்தக்கப்பல்கள் இராணுவ நோக்கில் இலங்கைக்கு வரவில்லை என்று இலங்கை பதிலளித்திருந்தது.
இந்தநிலையிலேயே மீண்டும் ஒரு நீர்மூழ்கி கப்பலை சீனா, இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய செய்திச்சேவை அறிவித்துள்ளது.
ராஜபக்சே இந்தியாவிற்கு கொடுத்த நெத்தியடி. கையாலாகாத இந்தியாவிற்கு தகுந்த செருப்படி.
தமிழ் நாட்டை விட சிரிய நாடு மலேசியா,இந்தியாவை விமர்சிப்பது பொருத்தம் ஆகாது.தன் இனம் கேவலப்படுவதை பார்த்து ஆனந்தம் கொள்வதில் தமிழனை தவிர வேறு எவறும் வரமுடியாது.நாராயண நாராயண.
theni , kayee இருவரும் சரியாக எழுதியிருக்கிறார்கள்
பாராட்டுக்கள்.
மலேசியா தமிழர் நாட்டைவிட 2.5 (இரண்டரை) மடங்கு பெரியது. நமது மேற்கு மலேசியாவுடன் ( மலாயா) ஒப்பிட்டால் கூட தமிழர்நாடு சுமார் 10ல் 1 பங்கு சிறியது. தன் இனம் கேவலப்படுவதைக் கண்டு இனமான உணர்வு உள்ளவர்கள் நிச்சயம் ஆதங்கமும் அவமானமும் அடைவர். ஆதலால்தான், அப்படி அவமானப் படாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில், உந்துதலில் நம் இன பலவீனங்களைத் தொடுகிறோம். அதன் சுயநல, திருட்டுத் தலைவர்களைக் குறை கூறுகிறோம். நமக்கு இன-மான உணர்வு இல்லையென்றால் இதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் முடிக்கமுடியாமல் இருக்கும் நம் வேலையை நாம் செய்துகொண்டு இருக்கலாம். இதுபோன்று, நமது பல வேலைகளுக்கு இடையில், நாம் நேரம் எடுத்துக் கருத்து கூறிக்கொண்டு இருக்கவேண்டாம். மற்ற இனங்கள் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி பேசுவதைவிட நம்மவர்கள் செய்யும் தவறுகளைத்தான் நாம் அதிகம் பேச வேண்டும். அல்லது நம் இனம் எப்படி அவமானப்பட்டால் நமக்கு என்ன என்ற சுயநல மனோநிலை வேண்டுமா?! நிறைய பலவீனங்கள் உள்ள ஒரு சமூகத்தின் தவறுகளைத் தொடாமல் எப்படி நாம் ஒரு சிறிய மாற்றத்தையாவது அந்த இனத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியும்?! அடியாதது திருந்தாது; குறை கூறப்படாதது உணராது. இது உண்மை. இதனை ஒப்புக்க கொள்ளாதவர்களுக்கும் அவர்கள் கொண்டுள்ள தத்தம் கருத்தை இருக்கப்பிடித்து நிற்க உரிமை உள்ளது.
தமிழர் இனம் கேவல படுத்தப் படுவத்தைப் பார்த்து பிற இன மக்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால், ஒரு தமிழன் பிற தமிழரின் குறைகளை நல்ல எண்ணத்தில் சுட்டிக் காட்டுகின்றான் என்றால் அந்த தமிழர் திருந்த வேண்டும் என்ற ஆதங்கத்தினாலேயே இன்றி ஆனந்தத்தினால் அல்ல. செம்பருத்தியில் அறிவுப் பூர்வமாக கருத்து எழுதும் பல வாசகர்கள் இதைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்கள், ஒரு சிலரைத் தவிர.
தமிழர் அழிவிக்கு துணை போன இந்தியா வாங்கி கட்டுகின்றது ..இன்னும் நிறைய வாங்குவார்கள் ..2009 மே 9 வரை சீனா தூரே இருந்து வேடிக்கை பார்த்தது இப்போது ராமேஸ்வரம் வரை வந்து விட்டது
BRICS நாடுகளான இந்தியாவும் சீனாவும் கூட்டு நாடகம் இது! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
எழுதுவதை வைத்தே உருவம்,நிறம்,குணம் அம்பலத்துக்கு தெரிகிறது,குழம்பிய மக்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தும் போக்கு கைவிடபடவேண்டும்.மாட்டிய பின் விரண்டாவாத ஜாலத்தை அரங்கேற்ற துணிவது மடமை,தொடராது காத்துகொள்வது சிறப்பு,வாழ்க நாராயண நாமம்.