அனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த மநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர் ச. சாமிவேலு மற்றும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் ஆகியோர் செல்லவிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் மலேசியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி உரையாற்றுவர்.
அனைத்துலக் குற்றவியல் மன்றத்தில் மலேசியா அங்கத்துவம் பெற வேண்டியதின் அவசியத்தைப் பற்றி குலசேகரன் விவாதிப்பார். சிறுபான்மையினருக்கு குறிப்பாக சொந்த நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன ஒழிப்பு, போர்க் குற்றங்கள் இவற்றை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்த அனைத்துல குற்றவியல் மன்றம்.
பின்தள்ளப்பட்ட இந்திய சமூகம்
மலேசியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி விட்ட மலேசிய இந்துக்களுக்கு உலக இந்து சமூகம் உதவ முன்வரவேண்டியதின் அவசியத்தையும் குலா வலியுறுத்துவார்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மலாயாவும் அதன் சுற்றுப்புற நாடுகளும் இந்துக்களால் ஆளப்பட்டு, இந்து சமயமே முதன்மைச் சமயமாக இருந்து வந்துள்ளது. இன்று பாலி மட்டுமே இந்து பெரும்பான்மை கொண்ட மாநிலமாக உள்ளது.
இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு ஒரு சாரர் சம்மதத்துடன் மதம் மாற்றபட்ட சிறார்கள் படும் கொடுமைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும். கணவனால் கைவிடப்பட்டு மதம் மாறி இரண்டு குழந்தைகளை பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திராகாந்தியின் நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்படும்.
இறுதியாக, இந்து சமயத்தின் பண்புகளும் அதன் மகத்துவமும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
இந்திய நாட்டின் அமைச்சர்களையும் மற்ற நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தாம் பெருமையாகக் கருதுவதாக குலா கூறுகிறார்.
குலசேகரன் மாநாட்டில் பேசவிருக்கும் நிகழ்ச்சிக்கு இந்தோனீசியாவின் பாலி ஆளுனர் இ மாடே மாங்கு பாஸ்திக்கா தலைமை ஏற்கிறார்.
இம்மாநாட்டிற்கு மலேசியாவுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுரினாம், தென் ஆப்பரிக்கா, மொரிசீயஸ், பிரான்ஸ், ஸ்ரீலங்கா, இந்தோனீசியா, நெதர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அமைச்சர்களும் சமய அறிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
ஆமாம் போயும் போயும் படாங் ஜாவா கோவிலுக்கா — அய்யா மொக்கை (MK.) இந்த பாடாங் ஜாவா கோயிலைப் பற்றியும், அந்தக் கோயிலின் சக்தி பற்றியும் உமக்கு என்ன தெரியும்? உண்மை தெரியாமல் பேச வேண்டாம். அந்த கோயில் இன்று அங்கே இல்லாவிட்டாலும் (அந்தக் கோயில் உடைப்புக்குக் காரணமானவர்கள் இன்று இருக்கும் நிலை தெரியும் அல்லவா) அந்த அம்மன் அங்கே தான் வாழ்கிறாள். கோயில் உடைக்கப்பட்டதற்காக 2008-இல் கூனர்கள் ஆட்சி இழந்தது மட்டுமன்றி இன்னும் பல அற்புதங்கள் அங்கே நிகழ்ந்துள்ளன. இந்திய சமுதாயம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது ஒரு காலம். இன்று சிலாங்கூர் இந்தியர்கள் பேச்சுரிமை பெற்றிருக்கிறார்கள். எங்கள் பிள்ளைகள் உயர்கல்விக்கு 1000 ரிங்கிட் கிடைக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர் இறந்தால் 3000 ரிங்கிட் கிடைக்கிறது. 2008-க்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச சேமிப்புத் திட்டம் உள்ளது. இங்கே உள்ள அரசு அலுவலகத்துக்குச் சென்றால் எங்களுக்கு உரிய மரியாதைக் கிடைக்கிறது. எங்கள் கோரிக்கைகள் உடன்படியாக கவனிக்கப்படுகிறது. நாங்கள் எங்கள் சொந்த புத்தியைப் பாவித்து கொடுங்கோல் ஆட்சிய அப்புறப்படுத்தினோம். இன்று சுகமாக வாழ்கிறோம். எனவே உண்மை தெரியாமல் – வரலாறு மறந்த – இந்தியர்கள் வரலாற்றை மறைத்த அந்த வல்லூறுகளின் பேச்சில் மதிமயங்கிக் கிடக்காமல் – சொந்த புத்தியை (இருந்தால்) பாவித்து தெளிவு பெறவேண்டும். தமிழ்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் ஆப்பு அடிக்கும் ஆட்சியை இன்னும் தலையில் வைத்துக் கொண்டாடுவது உங்கள் விருப்பம். ஆனால் உங்கள் சந்ததிகள் இங்கே தான் ‘குப்பை’ கொட்ட வேண்டும். அவர்கள் இங்கே குப்பை கொட்ட வேண்டுமா அல்லது குப்பை அள்ள வேண்டுமா? சிந்தியுங்கள். 55 ஆண்டுகாலம் புறையோடிப் போனவர்கள் சுயமாக சிந்திப்பது கொஞ்சம் சிரமமான வேலைதான். 55 ஆண்டுகாலம் ‘யா துவான்’ என்று சலாம் போட்டு கூனிக்குருகி அடிவருடிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நிமிர முடியாதுதான். ஆனாலும் நிமிரவும் சிந்திக்கவும் முயற்சி செய்யுங்கள். இதற்கு கொஞ்சம் பலம் (முட்டியில்) கொஞ்சம் மசாலா (மண்டையில்) வேணுமே..!
mk என்னை உத்தம புத்திரன் என்று பாராட்டியதற்கு நன்றி ,
மனிதனாக பிறந்தவன் இப்படிதான் இருக்கணும் மற்றவர்கள்
பாராட்ட பட கூடியவர்களாக இருக்க வேண்டும், ,சாமிவேலுவை போல தூற்றக்கூடாது
ஹே ராம் அமாம் ஆமாம் கோவிலை கட்டி பிடித்து அழுவுங்க ,சாமி உங்க முன்பு வந்து ஜிங்கு ஜிங்கு அடிச்சி பாரு ,சாமி என்றைக்கு வந்து உங்களிடம் கேட்சி எனக்கு இத கொடு அத கொடுன்னு ? விமானத்தை கண்டு பிடிச்சவனுக்கு எந்த அம்மன் வந்து சொன்னுச்சி ? கரண்ட கனடுபிடிச்சவநிடன் எந்த அம்மன் வந்து சொன்னிச்சி கரண்டு இருக்குன்னு ? தொலைப்பெசியய கண்டு பிடிச்சவனிடம் அம்மன் சொன்னுச்சா ?த்ளைப்பேசி இருக்கு கண்டு பிடின்னு ? அறிவில்லாதந்தான் மதைதையும் ஜாதியையும் கண்டு பிடிச்சான் தெரியுமா ?அதைதான் இப்ப இருக்கமா கட்டி பிடிசிகிட்டு அலுவுறேங்க ?போலைக்கிரதுக்கு ஏதாவது வலை இருக்கான்னு போயி பாருக்கப்பா ??
let me answer in simple words What is Hinduism …. As Hindus we should dwell in Sanathana Dharmam and our religious practice is very liberal and its allow one to undertake his life long vacation to know and experience ! As for the practice the journey of the soul is paramount and action by every Hindu be focused at reaching the Paramathma …. so Jeevaathma to realise the Paramathma .. in other words it is Atmic Yoga ! as for comparison religion like Christianity and Islam they are with only one book and one Messenger ….. the Hindus have uncountable saints , sages to look upon .. can a person who had stopped reading a test on Physic in form Five and claim he knows every thing in physics ! that’s why i say …. no one can gauge what is in store in Hinduism ! YOU MUST BE GIFTED TO BE BORN AS A HINDU and be proud about and try living to the fullest as a HINDU !
சனாதன தர்மம் என்பது தொன்மையான அல்லது பழமையான நெறி என்பதாகும். அப்படிப் பார்த்தால் மனு சாஸ்த்திரத்தில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை தாராளவாதம் என்பது சனாதன தர்மத்தை முழுமையாக அறியாமல் வந்த கருத்து. இந்துவாகப் பிறந்தேன் இந்துவாகாவே இறப்பேன் என்று நானும் தான் சொல்லிக் கொண்டிருந்தேன், அந்த வைதீக மதத்தையும், வைதீக பண்பாட்டையும் அறியும் முன்பு. அறிந்தபின் ‘sayonara’.