எம்எம்ஏ: மருத்துவ அறிக்கை தினேஷாவின் பெற்றோரிடம் கொடுக்கப்பட வேண்டும்

tineshaஅசுந்தா  மருத்துவமனை  காலஞ்சென்ற தினேஷாவின்  மருத்துவ  அறிக்கையை  அவரின்  பெற்றொரிடம்  வழங்க  வேண்டும். அதுதான்  நடைமுறை  வழக்கமாகும்  என  மலேசிய  மருத்துவச்  சங்கம் (எம்எம்ஏ)  கூறியது.

“அப்பெண்  வயது  வராதவர்  என்பதாலும்   பெற்றோரின் பராமரிப்பில்தான்  இருந்து  வந்தார்  என்பதாலும்  சுகாதார  அமைச்சின்  வழிகாட்டும் விதிமுறைகளின்படி மருத்துவ  அறிக்கை  அவர்களிடம்தான் கொடுக்கப்பட  வேண்டும்”,  என  எம்எம்ஏ  தலைவர்  டாக்டர்  எச். கிருஷ்ணகுமார்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பெற்றோர்  அவ்வறிக்கைக்காக தனியே  விண்ணப்பிக்கத்  தேவையில்லை  என்றாரவர்.