வடக்கில் இரகசியமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
“நான் அதிகமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். வவுனியா தெற்கு பிரதேச சபைப் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள மிகவும் நல்ல இளைஞர் ஒருவர், “ஏன் வெளியிலிருந்து கொண்டுவந்து இங்கு குடியேற்றுகின்றீர்கள்” என்று கேட்டார்.
இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சிடம் நான் விசாரித்தபோது, “இது எமது அமைச்சால் இடம்பெறும் செயல் அல்ல. வேறு நபர்கள்தான் இதைச் செய்கின்றனர்” என அமைச்சிலிருந்து தகவல் கிடைத்தது. ‘நாமல் கம’ என வடக்கில் ஒரு கிராமத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
எதற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது? அது தவறு. நாமலுக்கு என்ன நடந்தது? வடக்கிலுள்ள அனைவரும் இது தவறு எனக் கூறுகின்றனர். அங்குள்ள சிங்கள மக்களும் இதைத்தான் கூறுகின்றனர்.
மேலதிக இடங்களை எமது பிள்ளைகளுக்குக் கொடுங்கள். அல்லது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்குங்கள். ஏன் வெளியிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்துகின்றீர்கள் என்று கேட்கின்றனர். மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் மிகவும் இரகசியமான முறையில் இது செய்யப்படுகின்றது” – என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilcnnlk.com
சிங்களவர்கள் வட நாட்டு தொப்புள் கோடி உறவுகள்.அவர்கள் இலங்கை முழுவதும் சுதந்திர மாக வாழ இந்தியா என்றும் துணையாய் இருக்கும்.உலகின் புத்த மத நாடுகளும் அவர்களுக்கு ஆதரவு தரும்.தமிழர்கள் இலங்கையில் வாழ சென்றவர்.அவர்கள் அடிபணிந்து வாழுங்கள்.தமிழ் மூத்த மொழி.தமிழர் இலங்கையின் ஆதி மக்கள் என்றல்லாம் வெறும் பேச்சை குறைத்து பணிந்து போகவேண்டும்.இந்தியாவிலும் தமிழர்கள் அடக்கி வாசிக்க வேண்டும்.இல்லையேல் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்ட கதிதான் .உங்களால் ஒன்னும் பு…. முடியாது.வாழ்க சிங்களம்.
தலை எழுத்து .தமிழ் நாடு இந்தியாவோடு சேர்ந்து உலக தமிழனுக்கே அவமானத்தை தருகிறது.தனி தமிழ் அமைத்து தலை நிமிர்ந்து வாழ தமிழனுக்கு தைரியம் இல்லை போலும்.தமிழ் நாடு தமிழர்கள் கோழைகள் போல.