ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்களது விதிகளை மீறுபவர்களுக்கு கொடூரமான தண்டனைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட நபர் ஒருவரின் கண்களை கட்டி, உயரமான மாடியிலிருந்து தள்ளி விட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
தற்போது இதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் சிரியாவின் ரக்கா(Raqqa) நகரில் உள்ள டெல் அபிட்(Tel Abiad) என்ற இடத்தில் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரை இரண்டு தீவிரவாதிகள் நீதிமன்றத்தின் மேல்தளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது நடக்கபோகும் கொடூரத்தை வேடிக்கை பார்க்க திரண்டிய பொதுமக்கள் முன், நீதிபதி அளித்த தீர்ப்பை தீவிரவாதிகளில் ஒருவன் வாசித்துள்ளான்.
இதன்பின் அந்நபரின் கண்களை கருப்பு துணியால் கட்டிய தீவிரவாதிகள் அவரை அங்கிருந்து தள்ளி விட்டனர்.
கீழே விழுந்து கை, கால்கள் உடைந்து அந்த நபர் மரணமடைந்த போதும், அங்கு கூடியிருந்த மக்கள் ஆவேசத்துடன் அவனது சடலத்தை நோக்கி கற்களை வீசி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தீவிரவாதிகள் கூறியதாவது, இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு இதே நிலை தான் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறோம் என கூறியுள்ளனர்.
-http://world.lankasri.com