சிலாங்கூர் எம்பி அவரது சொத்து விவரத்தை அறிவிக்க வேண்டும்

sammபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் சொத்துகள்  பற்றிய  விவாதங்கள்  ஒருபுறம்  நடந்துவரும்  வேளையில்,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  தம்  சொத்து  நிலவரத்தை  வெளிப்படையாக  அறிவித்து  முன்மாதிரியாக  நடந்து  கொள்ள  வேண்டும்  என  சோலிடேரிடி  அனாக்  மூடா  மலேசியா (எஸ்ஏஎம்எம்) கேட்டுக்  கொண்டிருக்கிறது.

வெளிப்படைத்தன்மையை  வலியுறுத்தும்  சிலாங்கூர்  அரசின்  தலைவர்  என்ற  முறையில்  அஸ்மின்  அவ்வாறு  செய்வார்  என  எதிர்பார்ப்பது  நியாயமே  ஆகும்  என  எஸ்ஏஎம்எம்  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“மந்திரி  புசார்  அவரது  சொத்துகள்  பற்றியும்  அவரின்  மனைவியின்  சொத்து  விவரங்களையும்  அறிவிக்க  முன்வர  வேண்டும். அதேபோல்  சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்,  எம்பிகள், ஊராட்சி  மன்ற  உறுப்பினர்கள்  ஆகியோரும்  அவர்களின்  சொத்து  விவரங்களை  அறிவிப்பதைக்  கட்டாயமாக்க  வேண்டும்”, என எஸ்ஏஎம்எம்  ஒருங்கிணைப்பாளர்  கைரோல்  அன்வார்  அல்மெகாட்  கூறினார்.

இதனிடையே, செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷிதான்  அஸ்மினும் சிலாங்கூர்  மாநில  பிரதிநிதிகளும்  சொத்துகளை  அறிவிக்க  வேண்டும்  என்று    முன்மொழிந்தவர்  என்பதால்  அவரும்  அவரது  சொத்து  விவரத்தை  அறிவிக்க  வேண்டும்  என எஸ்ஏஎம்எம்  வலியுறுத்தியது.

“சைட்  அலியும்  அறிவிக்க  வேண்டும். அது  மக்கள்  அம்னோ  தலைவர்  ஒருவரின்  நிதி  நிலவரத்தை  அறிந்துகொள்ள  வாய்ப்பாக  அமையும்”, என்று  கைரோல்  கூறினார்.