பேரணியில் கலந்துகொள்ளும் யுஎம் மாணவர்களுக்கு விடுதிகளில் இடமில்லை

hostelயுனிவர்சிடி  மலாயா   மாணவர்  விடுதிகளில்  தங்கியுள்ள  மாணவர்கள்  கித்தா  லவான்  பேரணிகளில்  கலந்துகொள்வது  கண்டுபிடிக்கப்பட்டால்  அவர்கள்  தங்கியுள்ள  விடுதிகளிலிருந்து  வெளியேற்றப்படுவார்கள்  என  எச்சரிக்கப்பட்டிருக்கிறார்களாம்.

மார்ச்  12-இல் மாணவர்களுக்கும்  மாணவர்  விடுதி  நிர்வாகத்துக்குமிடையில்  நடைபெற்ற  கலந்துரையாடலின்போது  இந்த  எச்சரிக்கை  விடுக்கப்பட்டதாக  யுஎம்  மாணவர்  சங்கத்  துணைத்  தலைவர்  தே  வெய்  லூன்  தெரிவித்தார்.