எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், ஆறு மாதம் நாடாளுமன்றத்துக்கு வராதிருந்தாலும் அவரின் இடம் காலியாகாது என்கிறார் அவரின் வழக்குரைஞர் என்.சுரேந்திரன்.
எம்பி ஒருவர் ஆறு மாதம் வராதிருந்தால் அவரின் நாடாளுமன்ற இடம் இயல்பாகவே காலியாகும் என்ற கூட்டரசு அரசமைப்பு விதி அன்வாருக்குப் பொருந்தாது என சுரேந்திரன் கூறினார்.
“அன்வார் விரும்பி வராமலில்லை. அவர் வர விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார். அதனால் இந்த ஆறு-மாத விதி அவருக்குப் பொருந்தாது”, என்றவர் சொன்னார்.
முன்னதாக, அன்வார் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்ற சிறைத்துறையின் முடிவை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை அன்வாரின் சார்பில் சுரேந்திரன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதுக்குத்தான் சொல்லறது சட்டது உள்ளே “கநோடமா” கான்செர்
பூந்து கொடையர்த்து என்று. BAR கோன்சில் என்ன சொல்லுது பார்ப்போம்? இதை படிக்க பாருங்க ” பப்ர்தீ” எப்படி வேணும் என்றாலும் பூ சுத்தலாம். சுத்துவதும் நீதிமான்கள் என்ற நாடாளுமன்ற மாலுமிகள். ஜனநாயகம் சட்டத்துக்கு மட்டும்தான் அடங்குமாம் ! எங்கோயோ படித்தது. இப்போது கற்றது கை அளவு கல்லாதது கணினி அளவு. விரல சட்டத்தை சுண்டலாம்.