சவுதியில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் மூலம் நபர் ஒருவரை பற்றி அவதூறு செய்தி பரப்பிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் முடிவில் அவருக்கு 20,000 சவுதி ரியால் (5,332 டொலர்கள்) மற்றும் 70 சவுக்கடிகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவலை பொலிசார் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் சவுதி சைபர் கிரைம்(Cyber Crime)சட்டத்தின் படி ஒருவரை அவமானப்படுத்துதல் அல்லது பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி மற்றவர்களை பற்றி அவதூறு பரப்புதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு, ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 500,000 சவுதி ரியால் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-http://world.lankasri.com
சர்வாதிகாரம் தலை விரித்தாடும் இடம் மன்னர் ஆட்சி.
காலதிட்ட்கு எற்ற தண்டனை ….. இன்று பலர் இந்த தவறை மிகவும் சர்வ சாதாரணமாக செய்கின்றனர் ………. பிறர் மீது எந்த ஆதாரமும் இன்று அவதுறு பரப்புகின்றனர் அதை பலர் ஆராயாமல் பகிர்கின்றனர்
தண்டனை நிறைவேற்றியாச்சா இல்லையா, அதை முதலில் கூறுங்கள். எங்க நாட்டிலே (மலேசியா) இப்படியெல்லாம் இஸ்லாமிய முறைப்படி தண்டனை வழங்கப்படும் ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள், ஏன் என்று கேட்டால் தண்டனையை நிறைவேற்ற தகுதியான நபர் (அதாவது பிரம்படியோ அல்லது சவுக்கடியோ கொடுப்பவர்) இல்லை என்று கூறி மக்களின் கேலி சிரிப்புக்கு ஆளாவர்கள். தண்டனையை நிறைவேற்ற தகுதியான நபர் இல்லை என்று தெரிந்தும் இஸ்லாமிய முறைப்படி தண்டனை விதிக்கும் கூத்து எங்கள் நாட்டில் மட்டுமே காண கூடிய அதிசயங்களில் ஒன்று எனலாம். ஆகவே உங்கள் நாடும் அப்படிதானா என்று ஒரு டவுட்