ஹுடுட் சட்டவரைவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

hududகிளந்தான்  ஷியாரியா  சட்டம் 1993-க்குத்  திருத்தம்  கொண்டுவரும் சட்டவரைவு  கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஒருமித்த  இணக்கத்துடன்  நிறைவேற்றப்பட்டது.

45 சட்டமன்ற  உறுப்பினர்களில்  44 பேர்  இன்று  சட்டமன்றம்  வந்திருந்தனர். வந்த  அனைவரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். செம்பாக்கா தொகுதிக்கான  இடம்  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அஸிஸ்  நிக்  மாட்  காலமானதை  அடுத்து  காலியாகவுள்ளது. அதற்கான  இடைத்  தேர்தல்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறுகிறது.