எக்ஸ்கோ: நாங்கள் சுன்னத் செய்வதை முஸ்லிம்-அல்லாதார் தடுக்க முடியாது

circumஹுடுட்  சட்டம்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உரியது  என்பதால்  முஸ்லிம்-அல்லாதார்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கக்  காரணம்  ஏதுமில்லை.

கிளந்தானில்  ஹுடுட்  சட்ட  அமலாக்கத்தைத் தற்காத்துப்  பேசிய  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  நஸருடின்  டாவுட்  இவ்வாறு  கூறினார்.

“நாம்  சுன்னத்  செய்யக்  கூடாது  என்று  அவர்கள்(முஸ்லிம்- அல்லாதார்)  சொல்ல  முடியுமா?  அவர்கள்  செய்ய  விரும்பவில்லை  என்றால்  நாம்  ஒன்றும்  சொல்வதில்லை.

“ஆனால், நாம்  செய்யக்கூடாது  என்று  தடுப்பது  ஜனநாயகமல்ல. ஹுடுட்டிலும்  அப்படித்தான். இஸ்லாமிய  போதனைகளைப் பின்பற்றுவது  நம்  உரிமை”, என்றவர்  சட்டமன்றத்தில்  கூறினார்.