தாய்லாந்தில் பெண்கள் ஆபாச செல்பி எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
செல்போனில் எடுக்கப்படும் ‘செல்பி’ புகைப்படங்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.
எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
நாட்டின் கலாசாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாசாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

























