இலங்கையில் வாழ முடியாமல் இந்தியாவிற்கு திரும்பி சென்ற இலங்கை அகதிகள்

Refugees_Indiaஇலங்கை மன்னாரிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகதிகள் ஐவர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமேசுவரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கையைச் சேர்ந்த 5 பேர் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனுஷ்கோடி போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், சத்தியசீலன் (50), இவரது மனைவி பரமேஸ்வரி (40), இவர்களது மகள்களான மேரி (19),  அஞ்சலிதேவி (15), விடுதலைச்செல்வி (13) எனத் தெரியவந்தது.

இவர்கள் கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக வந்ததாகவும், திருவண்ணாமலை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அகதியாக தங்கியிருந்ததாகவும், 2010ம் ஆண்டு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றதாகவும், அங்கு வாழ்க்கையை மேற்கொள்ள அவதிப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா வருவதற்கு படகோட்டிகளுக்கு ரூ. 25 ஆயிரம் கொடுத்ததாகவும், வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு படகோட்டிகள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். போலிஸார் இவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: