முக்ரிஸ் பிரதமர் ஆகும்வரை மகாதிரின் கொலைப்படலம் தொடரும்

analyseடாக்டர்  மகாதிருக்கு அவரின்  மகன்  முக்ரிஸ் பிரதமர் ஆக  வேண்டும். அதற்கு  இடையூறாக  உள்ள  பிரதமர்களை  அவர்  “ஒழித்துக்கட்டுவார்”  என்கிறார்  அரசியல்  ஆய்வாளர்  வொங்  சின்  ஹுவாட்.

அது  அவருக்குப்  பிடித்தமான  விளையாட்டு. உயிருள்ளவரை  அதை  விட  மாட்டார்  என்று  வொங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“மகாதிர்  அவரின்  மகன் பிரதமர்  ஆகும்வரை  இந்தக்  கொலை  விளையாட்டை  நிறுத்துவார்  என்று  நான்  நினைக்கவில்லை.

“மகாதிர்  100 வயதுவரை  வாழ்ந்தாலும்  தொடர்ந்து  கொலை  செய்து  கொண்டுதான்  இருப்பார்”,என்றாரவர்.

மகாதிர்  இப்போது  பிரதமர்  நஜிப்மீது  போர்  தொடுத்துள்ளார். நஜிப்  பதவி  விலகவில்லை  என்றால் அம்னோ  அடுத்த  பொதுத்  தேர்தலில்  தோற்றுவிடும்  என்றவர்  கூறி  வருகிறார்.