பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு பொதுத் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிடும் துணிச்சல் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு உண்டா என்று வினவுகிறார் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.
“மகாதிருக்குள்ள ஆதரவு எனக்குத் தெரியாது. ஆனால், தமக்கு இன்னமும் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் நினைத்தால் அடுத்த பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடலாம்”, என நஸ்ரி சின் சியு டெய்லியிடம் கூறினார்.
அல்லது, மகாதிரும் நஜிப்பை எதிர்க்கும் மற்ற அம்னோ தலைவர்களும் அடுத்த ஆண்டு கட்சித் தலைவர் பதவிக்கு நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடலாம் என்றாரவர்.
அதேபோல் பிரதமரின் தலைமையின்மீது மக்களுக்கு ஏமாற்றம் என்றால் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் அவருக்கு வாக்களிக்காமல் இருக்கலாம்.
தவணைக்காலம் முடிவதற்குமுன் தலைமையை மாற்றுவது அம்னோவின் கலாசாரமல்ல என்று நஸ்ரி தெரிவித்தார்.
அடுத்த பொதுத்தேர்தலில் அல்தாந்துயா நஜிப், அதே பெக்கானில் தான் போட்டியிடுவார் என்று சொல்லும் தைரியம் இந்த அமைச்சர் நஸ்ரி க்கு உண்டா?
ஏன், பெக்கான்? நாட்டின் பொதுவான ஒரு தொகுதியில் போட்டியிட இருவரையும் அழைக்கலாமே?
கரடி என்று சொல்ல சொன்னால் கரண்டி என்று சொல்லுகிறார்.
சவால்டா மம்மா ல ,காக்க
மாமாவுக்கே வெற்றி .
டேய் …………நஜிப்……நீ முதல்ல பழநிவேல எதிர்த்து நின்னு ஜெயிக்க முடியுமா……………@#$%^&*+_)(*&^%$#@