1எம்டிபி சர்ச்சையால் அம்னோவில் நிலவும் மாறுபட்ட கருத்துகளின் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற ஊகங்களை மூத்த அமைச்சர்களான ஹிசாமுடின் ஹுசேனும், நஸ்ரி அப்துல் அஸிசும் நிராகரித்தனர்.
இது குறித்து ஹிசாமுடினிடம் கேட்டதற்கு, அவர் சிரித்ததோடு இது போன்ற கூட்டுச் சதித் திட்ட புனைவியல்களுக்கு தாம் இடம் கொடுப்பதில்லை என்றார்.
சமீபத்தில், பிரதமரும் இதர அமைச்சர்களும் சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்தது அமைச்சரவை மாற்றத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத்தான் என்று அம்னோ வலைப்பதிவாளர் ஷஹாபுடின் ஹுசேன் கூறிக்கொண்டார். அதில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பதவி பறிக்கப்படுவது ஒன்றாகும்.
அந்தப் பயணத்தில் உள்துறை அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான அஹமட் ஸாகிட் ஹமிடியும் இருந்தார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரான நஸ்ரி அமைச்சரவையில் மாற்றம் என்ற திட்டம் ஏதும் இல்லை, அதற்கான அறிகுறியும் இல்லை என்றார்.
என்ன மாறினாலும் ஊழலும் தில்லு முள்ளும் மாறாது — என்ன மார் தட்டி பேசினாலும் 3ம் உலக புத்தி மாறவே மாறாது .
திபிடிபதற்க்கான அறிகுறி புகை
மூட்டம்.
அல்லாமல் குறையாது இல்லாமல் புகையாது ….
பண்டிகார் கதைய போல …போகட்டும் பாப்போம் என்னை முடிந்தால் வண்டி ஓரம்கட்ட வேடியதுதான்.