பிஏசி-இன் 1எம்டிபி விசாரணை: நேரடி ஒளிபரப்பில்லை

teleபொதுக் கணக்குக் குழு, 1எம்டிபி-இடம்  நடத்தும்  விசாரணையை  நேரடி  ஒளிபரப்பு  செய்ய  வேண்டும்  என்ற  பரிந்துரைக்கு  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  அனுமதி அளிக்க  மறுத்து  விட்டார்.

நாடாளுமன்றக்  குழுக்களில்   விவாதிக்கப்படுவதை  நேரடி  ஒளிபரப்புச் செய்வதை  நிலை ஆணை 85  தடுக்கிறது  என்று  பண்டிகார்  கூறினார்.

குழுவிடம் வாக்குமூலம்  அளிக்கும்  தனிப்பட்டவர்களுக்கு  எம்பிகளுக்கு  இருப்பதுபோல்  சட்ட விலக்கு  இல்லை  என்பதால்  அவர்களின்  பாதுகாப்புக்காக அவ்விதி  உள்ளது  என்றவர்  கூறியதாக bnbbc.my  கூறியது.