என்எஸ்டி: அமைச்சரவை மாற்றம் நிகழலாம்

nstஹரி  ராயாவுக்குப்  பின்னர்  அமைச்சரவை  திருத்தி  அமைக்கப்படலாம்  என  அம்னோ  தொடர்புடைய  நியு  ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்,  பெயர்  குறிப்பிடப்படாத   வட்டாரங்களை  மேற்கோள்காட்டி  அறிவித்துள்ளது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி  குளறுபடிகளைக்  குறைகூறும்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினை  அமைச்சரவையிலிருந்து  வெளியேற்றுவார்  என்ற  ஊகம்  பரவிவரும்  வேளையில்  இச்செய்தி  வெளிவந்துள்ளது.

அமைச்சரவையில்  அந்நிறுவனத்தைக்  குறைகூறும்  மற்றொருவர்  புறநகர், வட்டார   மேம்பாட்டு  அமைச்சரும்  அம்னோ  உதவித்  தலைவருமான  ஷாபி  அப்டால்  ஆவார்.

“சில  அமைச்சர்கள்  இடம்  மாறுவார்கள்.  ஒருவர்  இருவர்  விலக்கப்படலாம்  என்று  வட்டாரங்கள்  தெரிவித்தன.

“இந்த  மாற்றங்கள் 13வது  பொதுத்  தேர்தல்  கொள்கை  அறிக்கையில் கொடுக்கப்பட்ட  வாக்குறுதிகளை  நிறைவேற்றும்  நோக்கம்  கொண்டவை”, என அந்த  என்எஸ்டி  செய்தி  கூறிற்று.