சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், ஹரி ராயாவுக்குப் பின்னர் அமைச்சரவை திருத்தி அமைக்கப்படலாம் என்று கூறப்படுவதை நிராகரித்தார். அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்றாரவர்.
“அதற்கான வாய்ப்பில்லை. பிரதமர் எந்த நேரத்திலும் அது பற்றிப் பேசியதில்லை.
“இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில்கூட அதற்கான அறிகுறி காணப்படவில்லை. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அமைச்சரவை ஒரு குடும்பம்போல் இருக்கிறது.
“அதனால், இந்த வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை”, என நஸ்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
நீங்கள் எப்பதான் உண்மையைப் பேசுகின்றீர்கள். நீங்கள் சொல்வது உண்மை என்று நம்புவதற்கு. கடந்த 6 மாதமாக நடக்கின்ற நடப்பைப் பார்க்கும் பொழுது உங்கள் மீது இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் பொய்த்து விட்டது.
அமைச்சரவை மாற்றினாலும் சாதிக்க போவதும் ஒன்றும் இல்லை. இப்படியே இன்னும் மூன்று வருடம் ஒட்டிவிடுங்கள் . தேர்தலில் மக்கள் உங்களை மாற்றி விடுவார்கள்.கவலை வேண்டாம்.
நஜிப்போட, உள்சிலுவார் முதல்கொண்டு பேசுதுவே!!!