மகாதிர்: 1எம்டிபியின் அருள் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும்

 

aliedsaysm1எம்டிபி நிறுவனம் பற்றி தாம் கூறியது பொய்யா என்பதை நிர்ணயிப்பது மகாதிரின் வேலைஅல்ல என்று அந்நிறுவனத்தின் தலைவரும் செயல்முறை இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி கூறிய போதிலும், அவர் பொய் கூறியது மக்களுக்கு தெரிந்ததுதான் என்று மகாதிர் கூறினார்.

“அவர் பொய் சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் (அமெரிக்க டாலர் 1 பில்லியனை) பார்த்ததாக கூறினார். நீங்கள் அங்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இருப்பதை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நான் மயக்கமடைந்து விடுவேன்.

“(ரொக்கமாக பணம் இருந்ததை) நான் பார்த்தேன் என்று அவர் உறுதியாகச் சொன்னார். இப்போது அவர்கள் (1எம்டிபி) எதையுமே காணவில்லைஎன்பதை நாம் அறிகிறோம்”, என்றார் மகாதிர்.

கேமன் தீவில் செய்யப்பட்டிருந்த 1எம்டிபியின் முதலீடு அனைத்தும் ரொக்கமாக திரும்பப் பெறப்பட்டு அது சிங்கபூரில் வைக்கப்பட்டுள்ளது என்று இதற்கு முன்னதாக அருள் கூறியிருந்ததை மகாதிர் குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்.

பின்னர், சிங்கப்பூரில் வைக்கப்பட்டிருப்பது ரொக்கம் அல்ல என்பது தெரிய வந்தது.