தேசிய இலக்கியவாதியான ஏ. சமட் சைட் டிஏபி-இல் சேர்ந்தது, டிஏபி சீனர்களின் கட்சி என்ற முத்திரையை உடைப்பதற்கான அக்கட்சியின் முயற்சிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
இதனைத் தெரிவித்த அரசியல் நோக்கர் வான் சைபுல் வான் ஜான், அதற்காக மலாய்க்காரர்கள் டிஏபி-க்குள் சென்று குவிந்து விடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனாலும் அது உடனடி விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் அதனால் ஒரு தாக்கம் உண்டாவது உறுதி என்றாரவர்.
“பாக் சமட் போன்றோரின் ஆதரவைப் பெற்றது டிஏபி-க்கு ஒரு வெற்றியாகும். அண்மைய பாஸ் முக்தாமாரை அடுத்து பல மலாய்க்காரர்கள் எங்கு போவதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இதைப் பலரும் கவனித்திருப்பார்கள். அவர்களில் சிலர் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றலாம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இது அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி என்ற தோற்றத்தை டிஏபி-க்குக் கொடுக்கும் என்றும் ஐடியாஸ் சிந்தனைக் குழுவின் தலைமைச் செயல் அதிகாரியான வான் சைபுல் கூறினார்.
எங்கே உங்களிடம் தலைவர் பதவியை குடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்……………… இல்லை என்றால் பினாங்கு முதல்வர் பதவியை குடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்…………… நீங்கள் எல்லாம் அவர்களுக்கு கருவேப்பிலை போல் முடிந்த உடன் தூக்கி எரிந்து விடுவார்கள் அது நிச்சயம்
ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே இப்படி சொல்லியிருந்தால், நமது நாட்டின் மர மண்டை மக்கள் நம்பியிருப்பார்கள். இப்போது too late! இருந்தாலும் மலாய்க்காரர்களை ஏமாற்ற உமக்கு ஒரு நாடாளுமன்ற சீட் கொடுக்கப்படும், அல்லது ஒரு செனட்டர் நாற்காலி. வர வர டி.எ.பி. ஐந்தடித்தனமான அரசியலை நடத்துகிறது. ஏற்கனவே டி.எ.பி.யில் நிறைய மலாய்த் தலைவர்கள் இருந்துள்ளனர். ஜோகூரில் அஹ்மாட் தொன், பகாங்கில் அபு பக்கார் லெபாய் சுடின், சிலாங்கூரில் அஷாரி, பினாங்கில் சுல்கிப்லி என அடுக்கிக் கொண்டே போகலாம். பல காலமாக இவர்களின் ரத்தத்தை எட்டிப் பாய்ந்து எலும்புவரை உறிஞ்சிவிட்டு, குப்பையில் தூக்கி எரிந்து, டயானாவை மடியில் வைத்துக் கொண்டனர், அப்பனும், மவனும். கிழவனைக் கொண்டு வந்து ‘படம்’ காட்ட எதோ ஒரு திட்டம் உள்ளது.
டி.ஏ. பி. யிலிருந்து தமிழர்களையும் தான் ஓரங்கட்டுகிறார்கள். அதைப்பற்றி சீனனும் கவலைப்படவில்லை, தமிழனும் கவலைப்படவில்லை! தமிழன் படித்தவன் தான். ஆனால் தனது வயிறு நிறைந்தால் போதும் என்று நினைக்கிறான்! என்னடா…தமிழா…!
ஒரே கட்சி ஒரே கொள்கை என்ற அரசியல் திருப்பம் வரும் வரையில் இம்மாதிரியான “நேற்று பூத்த காளான்” கதைகள் ஒரு தொடர் கதையே!!!!