பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வறிக்கை தகவல்

sri-lanka-hinduபாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ரிசர்ச் சென்டர், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் இதுகுறித்து அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாவது:- பாகிஸ்தானில் இந்திய பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அதாவது ஒரு குடும்பத்தில் 3.2 சதவீத சராசரியில் குழந்தைகள் பிறக்கின்றன.

சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 1.1 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 1.6 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாய்லாந்திலும் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் வரும் 2050-ம் ஆண்டில் இந்துக்களின் மக்கள் தொகை 0.1 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவை தவிர அயர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

-http://www.dinamani.com