பிகேஆர் டிஏபி சந்திப்பு ஆனால், எந்த முடிவும் காணப்படவில்லை

puaசிலாங்கூர்  பிகேஆரும்  டிஏபியும்  இன்று  சந்தித்து  மாநில  அரசியல்  நிலவரங்கள்  பற்றிப்  பேசின. ஆனால், அப்பேச்சுகளில்  முடிவு  எதுவும்  காணப்படவில்லை.

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அலுவலகத்தில்  பேச்சுகள்  நடைபெற்றன. பேச்சு  பற்றி சிலாங்கூர்  டிஏபி  தலைவர்  டோனி  புவா  எதுவும்  தெரிவிக்கவில்லை.

“ஆக்கப்பூர்வமான  கலந்துரையாடல். சிலாங்கூர்  மாநில  அரசின்  நிலை  பற்றியும்  நடப்பு  நெருக்கடி  பற்றியும்  கருத்துகளைப்  பரிமாறிக்  கொண்டோம்.

“30-நிமிடக்  கலந்துரையாடலுக்குப்  பின்னர்  ஒருவர்  நிலையை  மற்றவர்  நன்றாக  புரிந்து  கொண்டோம். ஹரி  ராயாவுக்குப்  பின்னர்  மீண்டும்  சந்திப்போம்”, என்றாரவர்.