மலேசியாவில் இருந்து சிறிலங்காவுக்கு அண்மையில் நாடுகடத்தப்பட்டவர், போலிக் கடனட்டை ஊடாக பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்களை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் இந்த மோசடிக்காக தமது நண்பர் ஒருவரையும் கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மலேசியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
37 வயதாகும் சிறிஸ்கந்தராஜா ஈழமாறன், குறித்த நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 7ம் திகதி கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அவர் கனடாவில் இருந்து செயற்படும் கடனட்டை மோசடி குழு ஒன்றுடன் இணைந்து மலேசியாவில் இந்த மோசடிகளில் ஈடுபட்டுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கனடாவில் உள்ள இலங்கையர் ஒருவரின் கடனட்டை இந்த குழுவினால் போலியாக தயாரிக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு குறித்த நபரால் இந்த கடனட்டை பயன்படுத்தப்பட்டு பெருந்தொகையான பணம் மோசடி செய்யப்பட்டதை அடுத்து, கனடாவில் குறித்த கடனட்டையின் உண்மையான உரிமையாளரால் தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைபாடு செய்யப்பட்டு, அதற்கான நட்ட ஈடு மற்றும் காப்புறுதி தொகையும் பெறப்படுகிறது.
இவ்வாறு இரட்டிப்பு மோசடிகள் இடம்பெற்று வந்துள்ளதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
-http://www.pathivu.com
உலகம் முழுதும் கடன் அட்டை மோசடியில் முதல்நிலை வகிப்பவர்கள் ஈழ தமிழர்கள், வேட்று நாட்டுக்கு அகதிகளை கடத்துவது, போதை பொருள் கடத்தல்கள் இவைகளிலும் முன்னணியில் உள்ளனர்!!!!
ஏன் என்று புரிய வில்லை ஈழ தமிழர்கள் லுக்கு பிற தமிழர்களை கண்டாலே புடிப்பது இல்லை அவர்களோடு வேலை செய்தால் நம்மை கவுக்கவே அவர்கள் பார்கிறார்கள்
ஏனென்றால் ஈழத் தமிழனுக்கு மொழியுணர்வும் இன உணர்வும் அதிகம்.அதனால்தான்.