தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே, நன்கொடைகள் வழியாகவும் டி-சட்டை விற்பனை வழியாகவும் மில்லியன் ரிங்கிட்டுக்குமேல் திரட்டியுள்ளது.
பெர்சே-இன் மந்திப் சிங் நேற்றிரவு 12.26வரை ரிம1,221,419.02 திரட்டப்பட்டதாக முகநூலில் கூறியிருந்தார்.
“கொடை வழங்கியவர்களுக்கு மில்லியன் நன்றிகள். இன்னும் வழங்காதவர்களிடம் வழங்குவீர் எனக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர் பதிவிட்டிருந்தார்.
பெர்சே, ஆகஸ்ட் 29-30-இல் இரவுமுழுக்க பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. மற்றவற்றுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதவி விலகலுக்குக் கோரிக்கை விடுப்பதும் அப்பேரணியின் நோக்கமாகும்.
உள்துறை துணை அமைச்சர் தடை விதிதுருகிறார் இந்த 4 பேரணிக்கு,இதை மீறி பேரணிக்கு மக்கள் போனால் போலிஸ் மக்களை கைது செய்வார்களா?விளக்கம் வேண்டும்.
தடை விதிப்பு சொல்லிவிட்டார் அறிவு கொழுந்து ஹேமீடி .பெர்சே உங்கள் நிலைபாடு என்ன ?
நல வருமானம் தான் ….எனக்கு இப்ப தான் நல்ல புரியுது …எலி எதுக்கு அம்மணமா ஓடுது’ன்னு…நல்ல அனுபவிக்கிரானுங்க…!!
சிவா கணபதி , நல வருமானம் தான் என்று>> நஜிப்பை கேளுட என் வென்று……. சிவா கணபதி நீ ma இ க காரண….
மக்கள் அம்மணமாக்கப் பட்டாலும் ஒரு சிலருக்கு தீபாவளியே!!! அறிவிலி என்று சொல்வதா அல்லது மடத்தனம் என்று சொல்வதா?? பறிக்கப் படுவது மக்கள் உரிமை. உண்மைக்கும் நேர்மைக்கும் ஆதரவு இருக்க வேண்டும்!! சிந்திப்போம் செயல் படுவோம்!!!