யூதர்களின் ஆதரவைப் பெற்றுள்ள டிஎபியை ஒழித்துக்கட்டுவதற்காக ரிம2.6 பில்லியனை அரேபியர்கள் பிரதமர் நஜிப்பிற்கு கொடுத்தனர் என்று ஶ்ரீகாடிங் அம்னோ தொகுதித் தலைவர் அப்துல் அசிஸ் கப்ராவி கூறிக்கொண்டார்.
இந்நாட்டில் டிஎபி இஸ்லாத்திற்கு மருட்டலாக இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றாரவர்.
“நாம் தேர்தலில் தோற்றிருந்தால், யூதர்களின் ஆதரவு பெற்ற டிஎபி ஆட்சியில் அமர்ந்திருக்கும்… சக முஸ்லிம் தலைவர்கள் டிஎபியின் மருட்டலை அறிந்திருந்தனர்.
“மலேசியாவின் முஸ்லிம் அரசு வீழ்ந்திருந்தால், உலகின் இஸ்லாமிய போராட்டம் சிதறியிருக்கும்”, என்று ஜொகூர் ஶ்ரீகாடிங் அம்னோ தொகுதி ஆண்டுக் கூட்டத்தில் இன்று அந்த அம்னோ தலைவர் கூறினார்.
ஜ.செ.க. யின் வளர்ச்சியை அரசியல் ரீதியில் எதிர்க்க வல்லமை இல்லாத இந்த அமீனோ கட்சி இப்படி வாயார பொய்களைச் சொல்வது வடி கட்டின முட்டாள்தனம். இஸ்லாம் மதத்தை காட்டி மலாய்க்காரர்களுக்கு மதத்தை ஏற்ற துணிந்த இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தாள் நிச்சயமாக இந்த நாட்டை தோல்வி அடைந்த நாடாக மாற்றி விடுவார்கள்.
பிரதமருக்கு அடிமேல் அடி விழுகின்றது. இறுதியாக இந்த பிரதமரை மத வெறியனாக சித்தரிக்க ஆரம்பித்து விட்டார்கள் அவரின் கூஜா தூக்கிகள். பிறரைப் பேச விட்டு தான் மௌனியாக இருப்பதினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பேரும் காற்றில் பறக்க ஆரம்பித்து விட்டது. இனி பிரதமரை காப்பாற்ற அல்லவாலும் முடியாது.
டிஎபி அந்த அம்னோ தலைவரின் மீது சட்ட எடுக்க வேண்டும்… இல்லையேல் அவரின் கூற்று உண்மையாகி விடும்….