பிரித்தானிய நாட்டிற்கு திரும்பி வந்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்களின் தலைகளை வெட்டுவேன் என ஜிகாதி ஜான் வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய தனியார் ஒன்லைன் செய்தி நிறுவனம் ஒன்று ஐ.எஸ் தீவிரவாதியான ஜிகாதி ஜான் பேசியுள்ள புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில், பிரித்தானிய நாட்டை சேர்ந்த தான் விரைவில் அந்த நாட்டிற்கு திரும்பி வந்து தங்களுடைய அமைப்பிற்கு எதிராக செயல்படுபவர்களின் தலைகளை துண்டாக்குவேன் என மிரட்டல் விடுத்துள்ளான்.
ஒட்டுமொத்த வீடியோவில் இருந்து 8 வினாடிகள் மட்டும் எடுக்கப்பட்டு காட்சியில் அவன் மிரட்டலை தவிர வேற எதுவும் பேசவில்லை.
ஜப்பான் குடிமகனான கெஞ்சி கோட்டியின் தலையை துண்டித்து கொலை செய்த பின்னர், ஜிகாதி ஜான் எந்த வீடியோவிலும் தோன்றவில்லை.
ஜிகாதி ஜானின் உண்மையான பெயர் ‘முகமது எம்வாசி என தெரியவந்ததை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் முதன் முறையாக ‘நான் முகமது எம்வாசி’ பேசுகிறேன் என பேச தொடங்கியுள்ளான்.
மேலும், இதுவரை முகத்தை மூடியே வீடியோவில் தோன்றிய ஜிகாதி ஜான், இந்த வீடியோவில் முகமூடி எதுவும் இன்றி தோன்றி மிரட்டல் விடுத்துள்ளான்.
இன்று வெளியாகியுள்ள இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை எந்த ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.
சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜிகாதி ஜானின் தலைக்கு அமெரிக்கா 6 மில்லியன் பவுண்ட் நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com