ஆகஸ்ட் 9-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாசிர் கூடாங்கில் அத்தொகுதி அம்னோ பேராளர் கூட்டத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார். ஆகஸ்ட் 29-இல், அதே பாசிர் கூடாங்கில் நஜிப்பின் அரசியல் குருவும் அவரைக் கடுமையாகக் குறைகூறிவருபவருமான டாக்டர் மகாதிர் முகம்மட் உரையாற்ற விருக்கிறார்.
மகாதிர் அங்கு Malaysia Hari Ni, Ke Mana Kita? (மலேசியா இன்று: எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?). என்ற தலைப்பில் உரையாற்றுவார். யயாசான் பெர்குருவான் இல்மு-வும் ச்சே டெட் மன்றமும் இந் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
பாசிர் கூடாங் உள்ளரங்கில் பிற்பகல் மணி 2-க்கு மகாதிரின் சொற்பொழிவு தொடங்கும் என யயாசான் பெர்குருவான் இல்மு இயக்குனர் அப்துல் ரஹ்மான் முகம்மட் ஷரிப் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“அனுமதி இலவசம். கிளப் ச்சே டெட்டுடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளோம்”, என்றாரவர்.
நஜிப், பாசிர் கூடாங் அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் ஒரு அழையா விருந்தாளியாகத்தான் கலந்துகொண்டார். சிங்கப்பூரின் தேசிய நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அவர் அப்படியே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு பாசிர் கூடாங் கூட்டத்துக்குச் சென்றார். இதை அத்தொகுதித் தலைவரும் ஜோகூர் மந்திரி புசாருமான காலிட் நோர்டின் தம் உரையில் குறிப்பாக எடுத்துரைத்தார்.
“இவ்வாண்டு தொகுதிக் கூட்டம் பேறு பெற்றது. ஏனென்றால், கட்சித் தலைவரே தொடக்கி வைக்கப் போகிறார்.. தொகுதி அழைக்காமல் தலைவரே தொடக்கிவைக்க முன்வந்துள்ளார்”, என காலிட் கூறினார்.
நஜிப்பின் ஜோகூர் வருகைக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தததாகக் கூற முடியாது. அவர் ஜூலை 27-இல் முகைதின் யாசினைத் துணைப் பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றியிருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில்தான் மகாதிரின் பாசிர் கூடாங் வருகை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாதிருக்கு பாசிர் கூடாங் மக்கள் எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுப்பார்கள், எப்படிப்பட்ட கூட்டம் கூடும், நஜிப்புக்குக் கூடியதைவிட பெரிய கூட்டம் கூடுமா என்றெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
மதிகெட்டவன் சென்றவிடமெல்லாம் செருப்படி …நான் ..ஜிப்பை சொன்னேன்
இந்த கூட்டத்தில் மகாதிர் சில உண்மைகளை சொல்வார் என பலரும் எதிர் பார்க்கிறார்கள். ஜிப்பின் வண்டவாளம் வெளிச்சத்திற்கு வருமா ?
மகாதிர் தனது எதிரியை வீழ்த்துவதற்கு களத்தில் நேரிடையாக இறங்கும் நாளாக இருக்கும். ஜோகூர் அம்னோ உறுப்பினர்கள் திரளாக திரண்டு அவர்தம் ஆதரவை தெரிவிக்கும் நாளாக இருக்கும். இதற்கு முன்னோடியாக விவசாய அமைச்சரின் கருத்து விளங்குகின்றது. இந்த அமைச்சருக்கும், புதிய து. பிரதமருக்கும் இடையே தொன்று தொட்டு இருக்கும் “ஈகோ” பிரச்னையை இன்று வெளிப்படையாகவே காணுகின்றோம் என்றால் கப்பல் சாய்கின்றது என்று பொருள்.
அமீனோ கட்சியின் இளைஞர் பிரிவு பிரதமர் மற்றும் துணை பிரதமரையும் 1MDB மற்றும் அரசியல் நிதி சம்பந்தமாக சந்திக்கப் போவதாக அறிவித்திருப்பது நம்பிக்கை நாயகனுக்கு எதிரான அணியின் பலம் வலுவடைகின்றது என்பது தெள்ளத் தெளிவு. இந்த மெர்டேகா நாள் முன்னிட்டு நடத்தப் படும் பெர்சே 4 – ல் அமீனோ கட்சிக்காரர்களே முன் நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. நம்பிக்கை நாயகன் கோவிந்தா கோவிந்தா!
ஒரு காலத்தில் இங்கு யாவரும் பாகுபாடு இல்லாமல் மலேசியர்கள் என்றிருந்தது ஆனால் 1969 தற்கு பிறகு சிறிது சிறிதாக நம்மை வந்தவர்களாக ஆக்கி என்னமோ இன்று நம்மை எதிரியாகவும் நம்மை ஒழித்து காட்டவும் மும்முரமாக ஆவேசத்துடனும் பல அரை வேக்காடுகள் கூவிக்கொண்டிருக்கின்றன– இதெல்லாம் இந் நாட்டில் இன்னொரு கலவரத்தை உண்டு பண்ணி ராணுவத்தையும் காவலையும் கொண்டு மலாய்க்காரர் அல்லாதோரை முடிக்கவே.