ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.
ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.
பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக்கொண்டு மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டுவிட்டது.
மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா, தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.
அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.
இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500
அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய்நிலத்தை விட்டு வெளியேறினார்கள்
வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை
இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.
இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப்போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும்தான்.
1947க்குப் பிறகு ஹிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்
80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்
தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.
படித்துவிட்டு
ஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக்கொண்டே போகிறது.
இதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்
இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்
இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.
வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்….
வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.
ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்லவேண்டும்.
தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.
1949ல் ‘மலேயா கணபதி’ 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.
அவரது தோழர் ‘மலேயா வீரசேனன்’ 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்
இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக்கொல்லப்பட்டனார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த ‘தில்லையாடி வள்ளியம்மை’ 16வயதில் போராடி இறந்தார்.
மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.
1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000 தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.
தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ‘முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்’ என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.
தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.
தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்
மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்தபோது ஹிந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.
ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலைசீவப்பட்டு கொல்லப்பட்டாளே
நம்மால் என்ன செய்யமுடிந்தது?
மலையகத் தமிழர் வெளியேறியபோது அந்தமானில் குடிவைக்க ஹிந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.
பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.
தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழிசெய்திருக்கலாம்.
வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.
எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்.
இன்றைய தமிழினத்துக்கு ,
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லாமல் சுகமாக வாழப்போகும் வருங்கால தமிழர்நாட்டு குடிமகன்களின் சார்பாக
‘உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்’
–தமிழர் எழுச்சிப்பறை
தமிழர் எழுச்சிப்பறை நட்புவட்டதிலிருந்து பெறபட்டது.. கடந்த தொழிலாளர்தின வாழ்த்து செய்தி .தமிழர்கள் சிந்திக்க செயல்பட தோழரின் கருத்து உதவலாம் ……
அன்று இருந்தது மெட்ராஸ் ராஜாதானி ……பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை வெளி நாட்டுக்கு தோட்டங்கள் உருவாக அனுப்பியபோது இந்தியா முழுவதும் ஒரு ஆய்வு செய்தார்களாம் ..அதன் படி தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் ஆனால் உரிமை பற்றி எதுவும் கேட்க மாட்டார்கள் என்று சொல்லபட்டதாம்.( இன்றும் நிலைமை இதுவே ).அனால் சீக்கியரை பற்றிய கருத்து வேறு விதமாக இருந்ததாம் …சரி அன்று மலாயா வந்த 9 லட்சம் தமிழர்கள் நிரந்தரமாக் இருந்து இருந்தால் இன்று ஒரு அரசியல் சக்தியாக பெருகிய அவர்கள் சந்ததிகள் உருவாக்கி இருப்பார்கள் …அன்று ரங்கூன் சனத்தொகையில் 80% தமிழர்கள் இருந்தார்களாம் …பாவம் ஜப்பானிய குண்டு வீச்சுக்கு பயந்து சொந்த நாட்டிற்கு ஓடினார்கள் ..அனால் பர்மியர்களும் ..மலாய் காரர்களும் இங்கே இருந்தார்கள் இவர்கள் போக இடம் இல்லை …யார் பிழை ????
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
தோட்டப் பாட்டாளிகளின் மக்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் இந்த மலை நாட்டில். மூன்று நான்கு தலைமுறை என்று காலம் மாறியது. நாமும் மாறி விட்டோம். அன்று தோட்டப் பாட்டாளி என்பது போய் இன்று தொழிற்ச்சாலை பாட்டாளி என்று முன்னேறி இருக்கின்றோம்!. ம.இ.க. நமக்கு வாங்கிக் கொடுத்த முன்னேற்றம்.
தமிழ் நாட்டை விட்டு வந்தவர்களைப் பற்றி இந்தியா கவலைப் படவில்லை. வட நாட்டு இந்தியர்களை பிஜி தீவிற்கு கொண்டு சென்ற இரண்டு கிழக்கிந்திய கம்பெனிகாரர்களின் கப்பல்கள் பாதி வழியில் மூழ்கிப் போனதில் கொந்தளித்து சஞ்சிக் கூலி உடன்படிக்கை செய்ய வேண்டி வற்புறுத்தியது வடவர்கள். கல்கத்தாவில் இருந்து ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் அரசாங்கம் அப்பொழுதும் தமிழர்களை கருப்பு இன அடிமைகள் போன்றே இங்கும் நம்மை கொண்டு வந்து சேர்த்தனர். இன்றும் நமக்கு சுதந்திரம் இல்லை.
ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்து நடிகையின் துணிச்சலான பேச்சு…!!!
ஈழத்து நடிகை திவ்யா. திவ்யாவின் ஆபாச அந்தரங்க காணொளி சில தினங்களுக்கு முன்பு இணையத்திலும், வாட்ஸ் ஆஃபிலும் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக திவ்யா பதிலளித்துள்ளார். அந்த ஆபாச அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் தான் என்று ஒப்புக் கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மேலும் பேசும் போது, எனக்கு இதனால் எந்த பிரச்னையும் கிடையாது என்று கூறியுள்ளார்.இதை வைத்துக் கொண்டு என்னைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்” என்று கொதித்தெழுந்துள்ளார்.
தமிழ் பேசும் எல்லா ஈழ மக்களும் தமிழர் என்று யார் சொன்னது Anonymous? அம்பை விடும் பொது யோசித்து விடுங்கள்!
உலகத்திலேயே மூத்த தொழில் விபச்சாரம். அதை மூடிகிட்டு செஞ்சா என்ன அவுத்துப் போட்டு செஞ்சா என்ன? முற்றிலும் நனைந்தவளுக்கு முக்காடு எதற்கு என்று அவளே மானம் இல்லாமல் அறிக்கை விடும்பொழுது பிறருக்கு எங்கே வலிக்குது?.
கணபதி ராவ் , ராய் ராவ்,, டி எ பியில் இல்லையா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++
சமீபத்திய பெர்சே பேரணியில் MIV என்று கோசம் கிளப்பி டி ஏ பி தலைவர்களுடன் கலக்காமல் தனியாக கட்சிக்குள் கட்சி நடத்தும் MIV எலி கூட்டடத்தை கண்டிக்க டி ஏ பியில் ஆளே இல்லையா? கணபதி ராவும் ரைடு ராவும் எதை நிரூபிக்க ஆட்டம் காட்டுகின்றனர் ? டி ஏ பி ,pkr எக்ஸ்கோ பதவி , dun பதவி நகராண்மை பதவி அதன் வருவாயில் இந்தியார்களுக்கு வாய்க்கு அரிசி போட புதிய ஆரசியல் ஆசனமா ? என்பதை வியங்கிக்கொண்டோ0ம். அடுத்த பொதுத் தேர்தலில் தெலுங்கர்களை பிரதிநிதிக்க தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி உத்வேக உரசலுக்கு MIV ஊக்குவிப்பு என்றால் டி ஏ பியை பலி கெடா ஆக்கக்கூடாது?
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியார்களுக்கு என்று எந்த சிறப்பு அரசியல் சலுகையும் இல்லை என்று வியாக்கினம் பேசும் கணபதி ராவின் எக்ஸ்கோ அல்லது சட்டமன்ற சிறப்புதான் என்ன ?
டான் ஸ்ரீ காளிட்டை எதிர்த்தாய் …சேவியர் கோப்புகளை தொலைத்தார் என்றாய் இவர்கள் செய்துவித்த சேவையில் கோயிலுக்கும் பள்ளி பசுக்கும் குப்பன் கொடுக்க மாநில அரசில் உனக்கு ஏன் உயர் பதவிகள்? என்று டி எ பி தலைவர்களை கேக்கிறோம்.? அரசியலுக்குள் சுய அரசியல் நடத்த டி எ பி இந்தியர்கள் என்ன கொங்கோரா கொக்குகளா ?
அரசியல் திமுறும் ஆணவ ஆங்காரமும் அலங்காரமும் நாட்களை எண்ணிவிடும். பட்டியலிட்டு சொல்லமுடியும் இனக்குடும்ப கொட்டங்களின் கோபுர கோயில் விளையாட்டை ?
இதோ அதோ என்று இடைத்தேர்தல் வந்துவிடும். இடுப்புக்கும் இடைவாருக்கும் வேலை வந்துவிடும் வேளையில் விசமித்தனங்களை விட்டு புட்டு அனுபவிக்கும் ஆத்மாவுக்கு பதில் சொல்ல திருந்து ! உன் நேரம் இன்ட்ரபில் மாடி ஏறி, பூம்புகார் வந்தாய். இந்தியர்களுள் ஏகாம்பத்திய உன் மெய் இன பேச்சில் தமிழனையும் ஏக்கிறாய்…தலைமைத்துவ திரிபு தாளத்தில் தை தை ஆட்டம் வேண்டாம். நாங்கள் படக்கதை எய்தவில்லை, கருணாநிதி போல படம்பாக்க பின் முதுகில் குத்த.
இது உன் அரசியல் ராஜாங்கம் என்று ஒன்றுமில்லை இங்கே பல பாபுபலிகள் காத்துவுள்ளோம். காது குத்த வேண்டாம் எங்களுக்கு ஏற்கனவே 9 ஓட்டைகள் சைவ சித்தாந்த வேதத்தில் உண்டு. நாங்கள் நீ போடும் இந்து நற்பணி விரிவாக்கமும் இல்லை. இப்போதுதான் தொடக்கம் ..இதுநாள் வரை எழுதவில்லை ..எழுத வச்சதும் நீதான்.
டி ஏ பி இவர்களின் சுய சேவையை விசாரிக்குமா டோனி புஆ ?
ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வதைவிட ஏமார்ந்து விட்டோம் என்று சொன்னால், இன்னும் சரியாக இருக்கும். தெளிவும் பிறக்கும். முன்னேற்றத்துக்கான அடுத்த நடவடிக்கையைப் பற்றி சிந்திக்க வழி வகுக்கும்!!! உன்னை நம்பு!! உன் திறமை மேல் நம்பிக்கை கொள்!!!!
கணபதி ராவிடம் என்ன வேண்டும் என தெளிவாக் கேளுங்கள் உதாரணம் . முன்னாள் தோ ட்ட தொழிலாளர்கலுக் கு உரிய சிறப்பு திட்டம் என்னாவானது அவர்களது பிள்ளை களுக்கு மாநிலத்தின் சிறப்பு உதவி எ ன்ன, கல்லூரி மாணவர்களுக்கு 1,000 வெள்ளி மட்டும் போதுமா , பி.பி.டி என் கடன் பெற்றால் யாசான் கடன் இல்லை . தொழிற்கல்வி கல்வி கற்றால் பிறரிடம் வேலை செய்வதில் அர்த்தம் இல்லை . வெளி நாட்டு தொழிலார்கள் குறைந்த சமபலத்தில் வேலை செய்கிறார்கள் . அதை விட்டுவிடு . ஓரங்கட்டப்பட சமூகத்திற்கு கோவிலும் தமிழ் பள்ளியு போதும் என நினைத்து விட்டீர்களா
நமதுபிறப்புவிகிதம்வெறும்1.5 மிககுறைவு, மலாய்பெண்கள்2.6. நமது பெண்கலின் முன்னேற்ற கலி ஆட்டத்தில், முதிர்கன்னி ஆகி, வயதுகடந்த திருமணம், பிள்ளை இல்லாமை, மரபணுகுறையுள்ள குழந்தை, விவாகரத்து என்று மேலும் மோசமாகி எதிர்காலத்தில் நாம் இருப்பதையும் இழக்கபோகிறோம். நமது மீடியாக்கள் இந்த அவலநிலையை மறந்து/ மறைத்து கூத்தடிக்கின்றனர்
கூலிக்கு மாரடிக்கும் தமிழன் என்ற நிலை மாறி தன்மானத்துடன் வாழும் தமிழனாக வாழ வேண்டும் எனில் நம் இனம் ஒன்றுபட வேண்டும் .நம்மில் ஒவ்வொருவரின் செயலும் அதை நோக்கி இருக்க வேண்டும் .