1எம்டிபி மீது பொய்யான செய்திகளை வெளியிட்டதாக தெரிய வந்தால் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்(எம்சிஎம்சி) வால் ஸ்திரிட் ஜர்னல்மீது நடவடிக்கை எடுக்கும்.
“அச்செய்திகள் தீய நோக்கம் கொண்டவை என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எம்சிஎம்சி பணிக்கப்படும்”, என தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைட் கெருவாக் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.
அத்துடன் பொதுக் கணக்குக் குழு(பிஏசி) உறுப்பினர்களில் எவரேனும் வால் ஸ்திரிட் ஜர்னலுக்குத் தகவலைக் கசிய விட்டார்களா என்பதையும் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
1எம்டிபி பற்றி நேற்று வெளியிட்டிருந்த செய்திக்காக WSJமீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று வினவியதற்கு அவர் இவ்வாறு கூறினார்.
அந்த அனைத்துலக நாளேடு, யுஏஇ-இன் இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு 1எம்டிபி-இடமிருந்து வரவேண்டிய யுஎஸ்$1.4 பில்லியன் இன்னும் வந்து சேரவில்லை என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
WSJ – யின் செய்தி தீய நோக்கம் கொண்டவை என்பது “நன்கொடை” வாங்கியவருக்கு இருக்கலாம். அந்த செய்தி மக்களுக்கு நல்லதைச் செய்யும் நோக்கம் கொண்டது எனப் படுவதால் “எம்சிஎம்சி” – யை பயன்படுத்தி மந்திரி செய்யும் செய்யும் செய்கை “தீய நோக்கம் கொண்டதாக” மக்களுக்குத் தெரிகின்றது. நேரிடையாக WSJ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வக்கில்லாமல் இப்படி நாடகம் ஆடுவது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது மேலும் அருவருப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
எடுக்கும் ஆனால் எடுக்காது!
பொய் செய்தியென்றால் WSJ மீது நடவடிக்கை எடுக்கப்படும், WSJ செய்தி உண்மையென்றால், வலது கையில் உள்ள ஒரு விரலை வாயில் சொருகி கொண்டும், இடது கையில் உள்ள ஒரு விரலை ஆசனவாயில் சொருகி கொண்டும், அமைதியாக அடக்கி வாசிப்பது போன்றவற்றை இன்னும் எத்தனை தலைமுறைக்குதான் FILM காட்டுவீர்கள்.
ஐய்யய்யோ, சரியாகச் சொன்னீர்!!!
அதான் பொய் இல்லை என்று தோணி புவா நாசுக்காக சொல்லிவிட்டாரே. அப்புறம் என்ன? உண்மை உண்மைதான். பொய் பொய்தான்.