செப்டம்பர் 16-இல் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பெர்ஹிம்புனான் மாருவா மலாயு சிகப்புச் சட்டைப் பேரணி பற்றி அதன் ஏற்பாட்டாளர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காவிட்டால் அது சட்டவிரோத பேரணியாகி விடும்.
பேரணி ஏற்பாட்டாளர்கள் பேரணி நடக்கும் இடத்துக்குச் சொந்தக்காரர்களிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும் என கோலாலும்பூர் போலீஸ் துணைத் தலைவர் லாவ் ஹொங் சூன் கூறினார்.
“இதுவரை தெரிவிக்கப்படவில்லை….. தெரிவிக்காவிட்டால், அனுமதி பெறத் தவறினால், சட்டங்கள் மீறப்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்”, என லாவ் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.
காவல் துறை புனிதமானது.அதனை யாரும் சீண்டிப்பார்க்காதீர்கள்.காவல்துறை ராஜநாகத்திற்கு சமம்.அதனிடம் யாரும் விளையாடாதீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாருமே புனிதமானவர்கள்– என காதில் பூ சுற்றிருந்தால்.
மலேசிய காவல்துறையை “ராஜநாகம்” என்று கூறி “ராஜநாகத்தை” அவமதித்து விட்டீரே !
எல்லாம் நாடக மாடுரணுங்க. பிழையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறானுங்க.