2016 பட்ஜெட்டைத் தாக்கல் செய்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு புறம் பாராட்டப்படும் வேளையில் நெகிரி செம்பிலானில் 13 அம்னோ தொகுதிகள் அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வெளியேற வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளன.
அவர்களுக்குத் தலைமை ஏற்றுள்ள தாமான் டிகேகே தொகுதித் தலைவர் கமருல் அஸ்மான் ஹபிபுர் ரஹ்மான், 2018 பொதுத் தேர்தலில் அம்னோ அழிந்து போகாமல் பாதுகாக்க நஜிப் வெளியேற வேண்டும் என அடிநிலை உறுப்பினர்கள் விரும்புகிறார்கள் என்றார்.
அம்னோவின் பிரச்னைகளுக்கு நஜிப்பைத் தண்டிப்பது அவர்களின் நோக்கமல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
“அம்னோ அதன் சொந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்ட கட்சியாகக் காணப்படுகிறது.
“சில தலைவர்களை ஓரங்கட்டியது ஏற்கனவே உள்ள பிரச்னைகளை மேலும் மோசமாக்கி விடும் எனக் கவலைப்படுகிறோம்”, என்றாரவர்.
கவலையை விடுங்கள்… உங்கள் வாயை அடைக்க விரைவில் மிகப்பெரிய குத்தகை கிடைக்கும்….. எல்லாம் பண மயம்.
வும்நோவை எதிர்தால் இப்படிதான்,அன்னியரை நம்பி புருஷனை கை விட்ட கதை,நாராயண நாராயண.
BR1M தொகை RM100/= உயர்த்தப்பட்டு, இனி வரும் காலங்களில் மின்சாரம், சமையல் எண்ணெய், உயர்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு கட்டன உயர்வு என்று இன்னும் என்னென்ன உயர்வு வருமோ தெரியவில்லை. ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒதுக்கப் பட்ட நிதி குறைப்பினால் வரப் போகும் அன்றாட வாழ்க்கைச் செலவின உயர்வு மறைக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையை நம்பி, நன்கொடை நம்பிக்கை நாயகன் மீது மக்கள் அதி நம்பிக்கை வைக்க வேண்டாம். மாக்களைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? மக்களின் செலவினங்கள் அதிகரித்து வருமானம் பெருகவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் எப்படி மேன்மை அடையும்? அவர் மீனைக் கொடுத்தார், ஆனால் மீனைப் பிடிக்கும் ஆற்றலை நமக்குக் கொடுக்கும் பட்ஜெட்டை சமர்பிக்கவில்லை. அதனால் அமீனோ கட்சி அடிமட்டத் தொண்டர்களுக்கு அறிவிருந்தால் ந.ந.நா. – வை கட்சியை விட்டே தூக்குங்கள்.
………………முடியாதுடா எப்படிடா ஒத்துக்குவான்
நஜிப்பை மலாய் மக்கள் தான் முற்றும் வெறுக்கின்றனர்,சப்சிடி இலையென்றால் பெரும் சமுகம் அழிந்துவிடும்.அவர் இனத்துக்கு விஷ பரிட்சை.மகாதிரே திணறுகின்றார் நஜிப்பை எதிர்க்க.நஜிப் ஆட்சிக்கு வந்ததும் நமக்கே அதிகம் வுளைதார்.ஆனால் நாம் ?,வசந்தத்தில் சிறப்பாக விளக்கபட்டது நாட்டின் சூழ்நிலை,”சூழ்நிலை பட்ஜெட் “நாட்டிற்கு அவசர கால பட்ஜெட் “,என்று நாராயண நாராயண.