நாடாளுமன்ற தேர்வுக் குழு பொதுக் கணக்குக்குழுவுக்கு ஐந்து எம்பிகளை நியமித்துள்ளது.
நால்வர் பிஎன் எம்பிகள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்குப் பதிலாக இவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஸ், கட்சிதாவிய தன் உறுப்பினர் ஒருவருக்குப் பதிலாக புதிதாக ஒருவரை நியமித்துள்ளது.
புதிதாக பிஏசி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பிஎன் எம்பிகள் வருமாறு: ஜாசின் எம்பி அஹ்மட் ஹம்சா, லங்காவி எம்பி நவாவி அஹமட், அலோர் காஜா எம்பி கோ நை குவோங்.
அவர்கள் அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்ட மத்யுஸ் தங்காவ், மாஸ் எர்மியாதி ஷம்சுதின், ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான், சுவா டீ யோங் ஆகியோருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பாஸ் கடந்த மாதம் பாஸிலிருந்து பிகேஆருக்குத் தாவிய தும்பாட் எம்பி கமருடின் ஜாப்பாருக்குப் பதிலாக கோட்டா பாரு எம்பி தகியுடின் ஹசானை பிஏசிக்கு நியமனம் செய்தது.
நியமனம் “நீ-எமனாக-” மாறாமல் இருந்தால் சரி!