சிலாங்கூர் அம்னோ இளைஞர் தலைவர் சைனூரி சைனல், முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் இன்னும் அம்னோ துணைத் தலைவர்தான் என்பதால் அவரை ஒதுக்கிவைப்பது முறையாகாது என்கிறார்.
“அவரை அப்படியே தள்ளிவைத்து விடக்கூடாது. அவர் துணைப் பிரதமராக இல்லை. ஆனால், அவர் அம்னோவில் இன்னமும் இரண்டாவது இடத்தில் இருப்பவர். அதற்காக அவருக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும்”, என அவர் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது.
டிசம்பர் மாத அம்னோ ஆண்டுக் கூட்டத்தின்போது முகைதின் கட்சியின் மகளிர், இளைஞர் கூட்டங்களைத் தொடக்கவைப்பது தடுக்கப்படும் என்று கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தபோது சைனூரி இவ்வாறு தெரிவித்தார்.
அது வெறும் வதந்தி என்றவர் நிராகரித்தார்.
“அது பற்றி அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இதுவரை அம்னோ பிரிவுகளின் கூட்டத்தைத் துணைத் தலைவரைத் தவிர வேறு யாரும் தொடக்கி வைத்ததில்லை. இளைஞர் தலைவர்களான நாங்கள் அம்னோ உச்சமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்போம்”. என்றாரவர்.
ஆனாலும், அம்னோ உறுப்பினர்கள் முன்னாள் பிரதமருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். பதவிக்காக மட்டுமல்ல அவருடைய அனுபவத்துக்காக. அவர் 35 ஆண்டுகளாகக் கட்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார் என்று சைனூரி கூறினார்.
குறள் 471
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
மு.வ உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
டூரி டாளாம் டாகிங்,பில சூடா மாசக் செண்டிரி கேளுவர் கலாவ் தா கென்ன ஒபரேசன் கே,நாராயண நாராயண.
“ஒருவேளை பிரதமர் பதவி விலகினால், அம்னோவின் துணை தலைவரான முகைதின் யாசின்-தான் “இடைக்கால பிரதமராக” பதவி ஏற்க வேண்டும், இதுதான் காலங்காலமாக அம்னோ கடைபிடித்து வரும் மரபு” என்று சிலாங்கூர் அம்னோ இளைஞர் தலைவர் சைனூரி சைனல் மறைமுகமாக கூறுகிறார், நியாயம்தானே !