ஐ.எஸ். அமைப்பினர் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்காக பெண்களை வைத்து புதிதாக ஒரு படையை உருவாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிர்களின் நிலைகளை அழிப்பதற்காக புதிதாக பெண்களை கொண்டு தற்கொலைப்படையை உருவாக்கியுள்ளதாக சிரியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் அமைப்பில் உள்ள வெளிநாட்டு பெண்களை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தாமல் உள்ளூர் பெண்களையே அவர்கள் அதிகமாக பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக ஏராளமான பெண்கள் தெரிவு செய்யப்படுவதாகவும் அவர்களுக்கு ஏராளமான பணம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாய் நாட்டை காப்பாற்றுவது நமது கடமை எனவே உயிரை இழப்பதற்கு தயங்க கூடாது. இங்கு இறப்பவர்கள் சொர்க்கத்தில் தங்களின் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று கூறி அவர்களை மூளை சலவை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக போதிய குழந்தைகள் இல்லாததாலும், பெண்கள் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்பதாலும் இந்த மனிதவெடி குண்டு தாக்குதலுக்கு பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com