2013 பினாங்கில் சீனப் புத்தாண்டுப் பொது உபசரிப்பில் கொரியன் சூப்பர்ஸ்டார் Psy நிகழ்ச்சி நடத்துவதற்கு பிஎன் 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதா? இதைப் பொதுக் கணக்குக்குழு(பிஏசி) கண்டறிய வேண்டும்.
இக்கேள்விக்கு இந்நாள்வரை பதில் கிடைக்கவில்லை என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“பிஏசி இன்று அல்லது நாளை அதன் விசாரணையை முடித்துக்கொள்ளும் என்று அதன் தலைவர் ஹசான் அரிபின் அறிவித்திருப்பதால் ஒருவேளை, இக்கேள்விக்கு அது விடையைக் கண்டுபிடிக்கக் கூடும்”, என லிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
Psy நிகழ்ச்சி மூலம் பினாங்கு மக்களின் ஆதரவைப் பெறலாம் என பிஎன் நினைத்தது. ஆனால், அது நடக்கவில்லை.
அந்நிகழ்ச்சியின்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூட்டத்தினரை நோக்கி “Psy-யை வரவேற்க நீங்கள் தயாரா?” என்று வினவினார். கூட்டத்தினர் “ஆமாம்” என்று குரல் எழுப்பினர்.
அதன்பின் அவர் “பிஎன்னை வரவேற்கத் தயாரா?”, என்று கேட்டதற்குக் கூட்டத்தின் பின்வரிசையில் இருந்தவர்கள் “இல்லை” என்று சிரித்துக்கொண்டே கூவினார்கள்.
எல்லாமே என் அப்பன் உன் அப்பன் பணம்தான் MP kedahvukku ஒரு எக்ஸ்கோ வுக்கு தலா oru latcham வெட்ட பட்டதும் நம் மக்கள் பணம்தான் ஆனால் ஒரு மக்கு நதேறி மடையனுக்கு நாட்டு மக்கள் பணம் அவன் பணம் என்ற நினைப்பு