ஒரு பொதுத் தேர்தல் செலவுக்கு ரிம2.6 பில்லியன் என்பது “பெரிய தொகை அல்ல” என்று கூறி இருந்த புதிதாக அம்னோ தகவல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அனுவார் மூசாவிடம் அது பற்றி மேலும் விளக்கம் கேட்டதற்கு அவர் கருத்துரைக்க மறுத்தார்.
இன்று யுனிவர்சிடி கோலாலும்பூர் வளாகத்தில் அவரைச் சுழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் நேற்று அவர் த ஸ்டாரிடம் தெரிவித்திருந்த கருத்துக்கு விளக்கம் கேட்டனர்.
“அந்த நேர்காணலிலேயே இருக்கிறது”, என அனுவார் சுருக்கமான பதிலை உதிர்த்தார்.
சே! இந்த 2.6 பில்லியனுக்குப் போய் இப்படி அலடிக்கலாமா! நாங்க இதை விட பெரிசு பெரிசா எல்லாம் கொள்ளை அடித்திருக்கோம். அதைப் பார்த்தா நீங்க என்னா சொல்லுவிங்களோ என்ற எண்ணத்தில் அப்படி சொன்னார் போலும்.