டாக்டர் எம்: என்னைக் கைது செய்ய விரும்புகிறார்கள்

wishதம்மைக்  கைது  செய்து  சிறையில்  அடைக்க  விரும்புகிறார்கள்  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியுள்ளார்..

“புதிய  தகவல்  தலைவர்  கைது  செய்யப்பட  வேண்டும்  என்பதற்காகவே  நான்  இப்படியெல்லாம்  செய்வதாகக்  கூறியுள்ளார். என்னைக்  கைது  செய்ய  விரும்புகிறார்கள்  என்பதற்கு  இது  தெள்ளத்  தெளிவான  எச்சரிக்கை”, என  மகாதிர்  அவருடைய  வலைப்பதிவில்  கூறினார்.

மகாதிர்  தமக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்  என்பதற்காகவே  அதிகாரிகளைச்  சீண்டி  விடுகிறார்  என   அம்னோ  தகவல்  தலைவர்  அனுவார்  மூசா  கூறி  இருந்தார்.

அனுவார்  அப்படிக்  கூறியதை  அடுத்து  மகாதிருக்கு  எதிராக  போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டு  போலீஸ்  விசாரணையைத்  தொடங்கி  இருப்பதாக  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்காரும்  கூறினார்.