முகைதின் விலக்கப்பட்டபோது எல்லாருடைய சம்மதமும் கேட்கப்பட்டதா? சாலே-க்கு தியோ பதிலடி

consenமுகைதின்  யாசின்  துணைப் பிரதமர்  பதவியிலிருந்தும்   முக்ரிஸ்  மகாதிர்  கெடா  மந்திரி  புசார்  பதவியிலிருந்தும்  அகற்றப்பட்டது  பிஎன்  பங்காளிக்கட்சிகளின்  கருத்திணக்கத்துடன்தான்  நடந்ததா?

டிஏபி  பிரச்சாரப்  பிரிவு  உதவிச்  செயலாளர்  தியோ  நை   சிங்,  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சாலே  சைட்  கெருவாக்கை  நோக்கி  இக்கேள்வியைக்  கேட்டிருக்கிறார்.

பினாங்கில்  பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருவர்  அரசுசார்ப்பு  நிறுவனங்களின்  இயக்குனர்  வாரியத்திலிருந்து  தூக்கப்பட்டது  பக்கத்தான்  ஹராபானில்  கருத்திணக்கம்  இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  சாலே கூறியிருப்பதற்குப்  பதிலடியாக   தியோ  இவ்வாறு  வினவினார்.