பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குடிமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் என்று கூறப்பட்டிருப்பதை அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலி மறுத்தார்.
“நான் அங்கு செல்லவில்லை. அதை நான் ஆதரிக்கவுமில்லை. அது பற்றி நான் அறியேன்”, என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
நஜிப்பைப் பதவி அகற்றும் இயக்கத்தை ஆதரிக்கிறாரா என்று வினவியதற்கு தெங்கு ரசாலி அவ்வாறு பதிலளித்தார்.
“இதெல்லாம் சகஜம்தானே? சிலர் ஆதரிப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினன். ஒரு எம்பியாகவே தொடர்ந்து இருப்பேன்”, என்றாரவர்.