நாட்டின் நன்மைக்காக பிரதமரை மாற்றுவது மட்டும் போதாது, நிறுவனச் சீரமைப்புகளிலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் எதிரணித் தலைவரும் நடப்பில் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராகிம் விரும்புகிறார்.
இன்று நீதிமன்றத்திலிருந்து காவலர்கள் அன்வாரைச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது அவரிடம் நஜிப் அப்துல் ரசாக்கைப் பிரதமர் பதவியிலிருந்து மாற்றுவது மட்டும் போதுமா என்று வினவப்பட்டது.
அதற்கு அன்வார், “நிறுவனச் சீரமைப்புக்கும், நீதித்துறை போன்றவற்றிலும் மற்ற துறைகளிலும் உண்மையான மாற்றங்களுக்காக மலேசியர்கள் தொடர்ந்து போராட வேண்டும்.
“ஆள்களை மாற்றுவது மட்டும் போதாது”, என்றார். உடனே சிறைக்காவலர்கள் தலையிட்டு “செய்தியாளர் கூட்டம் கூடாது” என்று உரக்கக் கூறினர்.