அன்புள்ள நாம் தலைவர் தம்பி சீமான் அவர்களுக்கு வணக்கம்.
நாம் தமிழர் தோல்விக்கு இடமே இல்லை. தமிழர்கள் மனதில் தமிழனாக தொடாக்கி உள்ளீர். தமிழன் கீற்றாக அது சீறி பாயும். மனதும் உதிரமும் அதில் தினம் கொதிக்கும்.
இலங்கை தமிழீழம் , ஆண்டு முடித்த முன்னோடி தலைவர்களை தீண்டாமலும், இருக்கும் மூத்த தமிழர்களை ஏசாமலும், பேசாமலும் தமிழர் மாநில அரசியல் பயணம் செய்து இருந்தால் வெற்றி கிட்டி இருக்கும்.
பழமையை தெரியா, புரியா முழிக்கும் பாமர மக்களிடம் உன் கொந்தளிப்பு தமிழ் விளங்கவில்லை. நிழல் அமைச்சரவை அமைத்து மாற்றம் என்பதை புதுமையா புரட்டி போட்டு இருக்கலாம்.
உலகம் பார்த்து மிரளும் விவாசய திட்டங்கள் நம் தமிழர் மக்களை பிரமிக்கவில்லை. 4 கோடி வாக்காளர்களில் 5 லட்சம் நாம் தமிழரிடம் உள்ளது மகிழ்ச்சியான தொடக்க விழா .மீதமுள்ள தமிழன் அந்த இதரவன் கூட்டத்தில் கும்மி அடிக்கிறான்.
அடுத்த தேர்தலுக்கு நாம் தமிழர் மேல கண் வைக்க எது தரனும்? தமிழா தமிழனா. தமிழன் அரசியல் ஜனநாயக உரிமை விளங்காத்தன தமிழனுக்கு எதுதான் வேண்டும்? ஒரு வேளை சிலரின் ச…வுக்கு மணியடித்தால் மண்டை சரக்கு மூளை சரவ சாதகமாகுமா ?
பணமில்லை, வீடு இல்லை, காடு இல்லை என்ற பிச்சை பாத்திர பரிதாபங்கள் உன்னை வருமையாக்கி அரசியல் கிருமிகள் கொன்று விடும். உன் தெளிவுக்கு காத்து நிற்க கொடுக்க ஒன்னுமிலாதவன் வருவான், அது நியாய வாதிகளின் பண்பு. அன்பு.
இங்கே வணிக அரசியல் நடத்த தெரியனும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தலைமையக கட்டிடம் ஒரு தொலைகாட்சி ஊடகம் ரோட்டில் நிற்க படிக்க ஒரு பத்திரிக்கை வேண்டும்.
இன்று வாக்குகளை எண்ணிய கணிணி ஏமாற்றி விட வித்தை வெளியாகி உள்ளது. தோற்ற எல்லா கட்சிகளும் கோஷமிட்டு மாற்று தேர்தலுக்கு வழி காண வேண்டும் RSS RAW மோடி பிராமண பாசம், இதுத்துவா அரசியல் மோசடிகள் எல்லாம் தமிழனை தாக்கி உள்ளது.
தீர்வுதான் என்ன ? சீமானை விட்டால் வேற வழி இல்லை தமிழனுக்கு …ஆனால் மெழுகு வர்த்திக்கு நீ ஆயிரம் வியாக்கணம் வைக்கலாம். தமிழன் சைமன் சீமானானது மெழுகு வர்த்திக்கு இந்துக்கள் என்ன புரிதல் செய்வர். அது ஒரு தினிப்பாக்கத்தான் . திணறுவார் .. “அரசு தந்த சின்னம் என்பதில்” மக்கள் உடன்பாடு ஊனமாகாது.
இன்று உலகில் சமயமும் மதமும் அரசியலுக்கு ஊது கோல். அது அடக்கும் அல்லது ஊதியும் விடலாம். சமூகவியல் சித்தனையில் பொதுச்சின்னம் நமது அடுத்த புரட்சியில் இருக்கட்டும். அல்லது அடிப்படை “தமிழன்” சாம்ராஜ்யம் தந்த சிவனுக்கு போவோம். வள்ளுவன் . அகத்தியன் , இப்படித்தமிழன் அடையாளங்கள் 5000 ஆண்டுகளைத் தாண்டிப்போவோம். தேடி எடுப்போம்.
நாம் தமிழர் நல்லதொரு அரசியல் அடையாள நகர்வு. தாய் தமிழன் குருதியில் குத்தும் உணர்வில் தமிழன் உடன் படுவான் …உலகின் இன உணர்வில் மரபணு உயர்வில் முந்தி நிற்பவன் தமிழன்.
அவன் ஏன் இப்படி இன உரிமைக்கு போராட வேண்டும்? 50 ஆண்டுகளாக திராவிட இந்துதவா கல்வி போதனையில் கோட்டை விட்டு, இப்போ புதிய இனப புரட்சி பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்ப்பது போல மரம் ஏறத்தான் செய்யும். இனிய இளஞர் கூட்டம் நம் இன மான உணர்வில் கலந்துள்ள விவேகம் உன் திறமையின் வெளிப்பாடு. பெருமையாக உள்ளது. அந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் பல கோடியாக மிளிரும் நாள் ஒரு புதிய தமிழன் பிரளயம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது உலகம் கண்ட அரசியல் ஆதாரம்,
கோபத்தின் அனல் வெளிப்பாடு பதவிக்கு பிறகு வர வேண்டும். அது தலைமைத்துவம். அதற்கு முன் வருவது நிறைவேறாத கோபம் அது விஷமம்.அதுவே அரசியல் சத்ருவாகும்.
சினிமாவை கையில் ஏந்துங்கள். அது இன்னும் 5 ஆண்டுகளுக்கு அரசு அரசியல் சாணக்கியம் பேசும். உரமிடுங்கள். தமிழன் அரசியல் கொடூரங்களை கொட்டிததீருங்கள். தமிழனை உருமாற்றம் செய்யுங்கள். தியட்டர் வேண்டாம். பட்டி தொட்டிகளில் பள்ளிகூடங்களில் படம் காட்டுவோம் .
நாம் தமிழர் மாபெரும் காடிடடதுக்கு நிதி சேருங்கள். தமிழன் டிவி செய்வோம். தமிழன் நாளிதழ் செய்வோம். காணி நிலம் வேண்டும் என்றான் பாரதி அந்த மண் உரிமையை உலகக் தமிழனிடம் காட்டுவோம்.
நாளை நமது என்றிலாமல் இன்றே உரக்க கத்துவோம். காட்டுவோம் . தமிழர் தேசிய சிந்தனை மெல்ல உலகத தமிழனின் அடையாளத்தை அழகாய் பதிப்போம். தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நமதென்போம் தமிழா ! நன்றி.
நாம் தமிழர்…தமிழர் என்று ஐநாவுக்கு உரக்கசசொல்வோம்.
தமிழவன் பொன் ரங்கன்
தமிழர் தேசியம் பேரவை மலேசியா
நாம் தமிழர் / தமிழர் குரல்
22/05/ 2016 கோலா லம்பூர்.
மிக்க நன்றி பொன் ரங்கன் அவர்களே…
நன்றி ஐயா புலிகேசி அவர்களே …விரைவில் தமிழர்கள் உரிமை குறித்து முதல்வர் அவர்களுக்கும் கடிதம் எழுதுவேன். மோடியிடம் உரிமைப்பெற்று தமிழனை பிரதிநிதித்து ஐநா சபைக்கு போயி தமிழர் என்ற இனப்பதிவை முன் வைக்க வேண்டும்.
சீமான் ஒரு கிறிஸ்துவர் என்று புரளியைக் கிளப்பாதீர். அவர் தந்தை பெயர் செந்தமிழன். அப்படியிருக்க அவர் ஏன் கிறிஸ்துவ பெயரை வைக்கிறார். சிலருக்கு வதந்தியைக் கிளப்புவதே வேலையாய் போய்விட்டது!
” இலங்கை தமிழீழம் , ஆண்டு முடித்த முன்னோடி தலைவர்களை தீண்டாமலும், இருக்கும் மூத்த தமிழர்களை ஏசாமலும், பேசாமலும்,
தமிழ்நாட்டை தமிழனிடமிருந்து திராவிடன் படையெடுத்து கைபற்றியதுபோல் தோற்றத்தை ஏற்படுத்தி இனவாதத்தை வளர்க்க முற்படாமலும் தமிழர் மாநில அரசியல் பயணம் செய்து இருந்தால் வெற்றி கிட்டி இருக்கும் ” என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இனி வரும் 5 ஆண்டுகளில் .தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த இயக்கத்தின் இளைய தலைமுறையினர் ஒன்றுபட்டு அந்த அந்த கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் செயலாற்றவேண்டும் .இதில் சுயநலம் என்பது இம்மியளவும் இருக்கக்கூடாது . இந்த செயல்கள் நமது ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும் .அடுத்த தேர்தலில் தோல்வியை தவிர்க்கும் .
சங்கே முழங்கு