தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை அமெரிக்க தூதுவர் அடுல் கெசப் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடக பணியகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தார்.
இலங்கை தொடர்பான வாய் மூல அறிக்கை அடுத்த வாரமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்ட தொடரில் சமர்ப்பிக்கபடவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவித விபரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com




























ஐயையோ! சம்பத் சிங்களவனோடு சேர்ந்துவாழ ஆசை பாடுவாரே!