தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக தமிழர்களின் கலையை மீட்டெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அதுதான் பரதத்தில் திருமுறை. பரதம் என்பது என்ன என்பதில் சிக்கல் உள்ளது, அதை தமிழ்ப்படுத்தும் வகையில் திருமுறையில் உள்ள நால்வர் பெருமக்களின் ஒன்பது பாடல்களுக்கு ஒரு நாட்டிய வடிவம் கொடுத்துள்ளார் பரஞ்சோதி முத்துவேல்.
ஆடல்களுக்கு அரசன் சிவபெருமான். உலகத்தின் இயக்கமே இறைவனின் ஆட்டம் என்றும் பொருள் படுத்துவர். அந்த ஆட்டத்தை ஆடல் கலையின் நுட்பங்கள் கற்ற அற்புத கலைஞர் பரஞ்சோதி நாட்டியம் வழி அனைவரையும் ஓர் உணர்வு நிலைக்கு கொண்டு செல்வதில் வல்லவர் என்றால் மிகையாகது.
முனைவர் ஆறு நாகப்பன் அவர்களின் உதவியுடன் தாயாரிக்கப்பட்டுள்ள பரதத்தில் திருமுறை என்ற இந்த நுண்ணிய பண்பாட்டு நிகழ்வு மலேசிய சைவ சமயப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழ்ப் பண்பாடு மீது ஆர்வம் கொண்ட பற்றாளர்களின் ஆதரவு பெருதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாள்: தை முதல் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2048 ( 14.01.2017 – சனிக்கிழமை)
நேரம்: இரவு 7.30 முதல் 10.00 வரை
இடம்: கோலாலம்பூர், நுண்கலைக்கோயில் / Temple of Fine Arts – Brickfields.
நுழைவுக் கட்டணம்: காணிக்கையாக செலுத்தலாம்.
நல்ல முயட்சி வாழ்த்துக்கள் . முனைவர் ஆறு நாகப்பன் ஒரு அட்புதமானவர்.
நல்லதோர் படைப்பு முனைவர் ஐயா ஆறு.நாகப்பனார் முயற்சியில் நடைப்பெறுவது பாராட்டுக்குறியது. நடனக்கலைஞர் பரஞ்சோதி முத்துவேல் அவர்களுக்கு எனது குடும்பத்தார் சார்பாக அன்பு வாழ்த்துகள்.
நிகழ்வு சிறப்பாக நடைபெற தில்லைக் கூத்தன் அருள்புரிவாராக! .
சைவமும் தமிழும் செழித்தோங்க ஐயா ஆறு , நாகப்பனார் எடுத்திருக்கும் பணிகள் மகிழ்ச்சியை தருகின்றன ! அக்கறை யுடன்
கலைப்பபணி ஆற்றும் பரம்ஜோதி முத்துவேலு அவர்களுக்கும் நன்றிகள் பற்பல!!!!
இந்நிகழ்வில், கடந்த நூற்றாண்டின் தமிழ் அறிஞர் பெருமக்கள் ஏன் பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்து அதற்கு திருவள்ளுவர் ஆண்டு எனவும் பெயரிட்டுத் துவக்கினர் என்பதைப் பற்றி முனைவர் திரு. நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் ஓர் சிற்றுரையாற்ற உள்ளார்.
இந்நாட்டில் வாழும் தமிழருக்குத் தை பொங்கல் திருநாளே தமிழர் புத்தாண்டு தினம் என அறிவித்துத் தமிழர் புத்தாண்டிற்கு மலேசிய சைவ சமய பேரவை கொடுக்கும் அங்கீகாரம் எனவும் பிரகடனம் செய்ய உள்ளார்.
அதனை முன்னிட்டு எதிர்வரும் ஆண்டுகளில் இந்நாட்டில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் சைவ சமய மன்றங்கள் தத்தம் இடங்களில் தை பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகளை ஏற்று நடத்துவர்.
இது மலேசிய வாழ் தமிழருக்குக் கிடைத்த ஒரு திருப்பு முனையாகவும். நாடாளாவிய ஒரு சமய இயக்கம் தமிழர் புத்தாண்டை அங்கீகரித்தப் பெருமை மலேசிய சைவ சமய பேரவைக்கும் அதன் தலைவராகிய முனைவர் திரு. நாகப்பன் ஆறுமுகம் அவர்களையும் சாரும்.
இது தெய்வத்திரு சா. ஆ. அன்பானந்தன் காலத்திற்கு தமிழரின் உணர்வை மீண்டும் இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.
சைவமும் தமிழும் என்றும் இணைப்பிரியாதது என்று திரு. மு.தா. நீலவானன் அவர்கள் கூறியது உண்மையே.
“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெல்லாம்”
மதிப்பிற்குரிய முனைவர் திரு. நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் சொல்லி விட்டபடியால் இனிமேல் 2 + 2 ஐந்தாகி விடும்.
பகவன் (pagawan) என்ற தமிழ் சொல்லை (bagawan) என்று வடவன் மொழி சொல்லாக திரித்து எழுதிய உங்க கூத்தாடி கூட்டத்துக்கு வேணும்னா mathematic பிரச்சனைகள் நிறைய இருக்கும் பூச்சுமணி! ….எங்க முப்பாட்டன் திருவள்ளுவருக்கு அந்த பிரச்னை எல்லாம் கிடையாது! ok..வா…..
தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு
சிவனருள் இதழ் 23 – கார்த்திகை-மார்கழி மீ திருவள்ளுவர் ஆண்டு ௨௦௪௭ – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்
எந்த நாட்டு மக்களாயினும் அவரவர் நாட்டுப் பருவ காலங்களை ஒட்டியே கேளிக்கை நிறைந்த விழாக்கள் நடைபெறும். தமிழ் நாட்டில் தைத்திங்கள் இளவேனில் காலம், வேனில் என்றால் வெயில். இளவேனில் என்றால் இளவெயில். கடுங்குளிரும் அல்லாத கடும் வெயிலும் அல்லாத காலம் இளவேனில். தைக்கு முந்திய காலம் குளிர் காலம். மார்கழித் திங்கள் பனிக்காலம். அதைக் கடந்து வருவது தை இளவேனில். இக்காலம் ஊர் மக்கள் எல்லாரும் கூடிக் கேளிக்கை நிரம்பிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு இயைந்த காலம் என்பதால் தமிழர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் உகந்தது என்று இக்காலத்தைத் தேர்ந்தனர்.
தைத்திங்கள் அறுவடைக்குப் பின் புத்தரிசி கொண்டு பொங்கல் இட்டு மகிழும் காலம். உழவின் பயனால் உள்ளமும் இல்லமும் புதிய பொலிவு கொண்டிருக்கும். ஆண்டு முழுவதும் கண்ட கனவுகள் செயலுரு கொள்ளும் வாய்ப்புகள் மிகும். தை பிறந்தால் வழி பிறக்குமன்றோ? புத்தாண்டு பிறந்ததில் வியப்பில்லை.
தமிழ்ப் புத்தாண்டு
தமிழர் வரலாற்றைக் காட்டும் இலக்கியங்களில் தமிழர் புத்தாண்டைக் காட்டும் குறிப்புகள் ஏதும் தெளிவாக இல்லை. தொல்காப்பிய நூற்பா ஒன்றுக்கும் உரை எழுதிய நச்சினார்கினியர் “சிங்க ஓரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் ஆண்டாம்” என்றார். இது ஆவணி முதல் ஆடி வரையிலான ஆண்டுகள் கணக்கைக் காட்டுவது. இப்போது இருக்கும் சித்திரையில் தொடங்கும் சமஸ்கிருத அறுபது ஆண்டுக் கணக்கு தொடங்கும் முன் ஆவணி முதல் ஆடி வரையிலான ஆண்டுக் கணக்கே தமிழர் வழக்கில் இருந்தது. இதுவும் தொடர் எண் வரிசை இல்லாத ஆண்டாக இருந்தது.
கல்வெட்டுகளில் காணப்படும் ஆண்டுக் கணக்குகள் அரசர் ஆட்சிக்கு வந்த ஆண்டுகளைக் குறிப்பிட்டு அதிலிருந்து இத்தனையாம் ஆண்டு என்றே ஆண்டுகளைக் குறிப்பிடுகின்றன. அந்த அரசனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசனின் ஆட்சி ஆண்டிலிருந்து புதிய ஆண்டு கணக்கு தொடங்கும்.
வடக்கிலிருந்து வந்த பிராமணர் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் ஆட்சிக்கு வந்த சக ஆண்டைத் தமிழருக்கு அறிமுகப்படுத்தினர். இந்த ஆண்டு சித்திரையில் தொடங்கி பங்குனியில் முடிவதாய் இருந்தது. இதுவே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தும் நம்முள் திணிக்கப் பட்டது. இதிலும் தொடர் ஆண்டுக் கணக்கு இல்லை. அறுபது ஆண்டுகளின் சுழற்சியே இருந்தது.
இக்காரணங்களால் 1921 இல் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து தமிழர் தொடர் ஆண்டைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர். இளவேனில் காலத்தில் விழா கொண்டாடுவதே தமிழர் மரபு என்பதால் தை முதல் நாள் தமிழர் புத்தாண்டு என்று முடிவு செய்யப் பட்டது.
திருவள்ளுவர் ஆண்டு கிருஸ்த்து பிறப்புக்கு 31 ஆண்டுகள் முந்தியது என்பதால் ஆங்கில ஆண்டோடு 31 ஆண்டைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கு வரும். இது தொடர் ஆண்டு என்பதால் அடுத்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குப் பொருந்துவதாகும்.
தமிழ்ப் புத்தாண்டை தமிழர்தாம் முடிவு செய்ய வேண்டும். தமிழர் அல்லதாருக்கு இங்கென்ன வேலை?
இவ்விடம் மறுபதிப்புச் செய்ததது தேனீ.
திருவள்ளுவர் ஆண்டுகளையோ அல்லது மாதங்களையோ செய்யவே …… செய்யேவே இல்லை. அவர் பேரை சொல்லி நீங்களே மாட்ட்று செய்து … தமிழர்களை மடையர்கள் ஆக்க பார்க்கிறீர்கள் . ஜெகோரியன் காலண்டர் கிருஸ்துவத்திற்கு பின்பு 1500 ஆம் ஆண்டு வாக்கில் தான் முடிவுற்றது ….. பொய் சொல்லியே உரை ஏமாத்தும் புலிகேசி என்ற புளித்த கேசி அவர்களே …. எங்கே விளக்குங்கள் எப்படி திருவள்ளுவர் ஆண்டுகளை செய்தார் என்று ? வேண்டும் என்றால் உங்கள் ஆசான் அவர்களையும் சொல்ல சொல்லுங்கள் …..
தமிழர் வரலாறு அறியாத பிள்ளைகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், 1890-ம் ஆண்டு முதல் 1920 – ம் ஆண்டு வரை மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த, கல்வி, சமயம், அரசியல் ஆகியவற்றை முற்றிலும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு தமிழரை மொழி, சமயம், அரசியலில் அடிமைப்படுத்தி ஆண்ட பிராமணர் கைங்காரியத்தை அறிந்து கொண்டு பின்னர் பேசட்டும். அப்புறம் நாம் பதில் சொல்லலாம்.
தேனி! அறியாத பிள்ளைக்குப் பதில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை! புறக்கணித்தாலே போதும்! இன்னும் அறிவு வளர்ச்சி வரவில்லை!
கேள்வியே கேட்க்கக்கூடாது என்று சாமி வேலு போல் சட்டம் போட்டு கொள்ளுங்கள், பதில் இல்லை என்றால் ! அப்படியாவது உரை ஏமாத்தி பொளச்சிக்கலாம் ….. உலகில் இரண்டே காலாண்டர்கள்தான். முதலாவதாக, முஸ்லிம்களின் சந்திர காலண்டர் . இரண்டாவதாக ஜெகோரியன் சூரிய காலண்டர். திருவள்ளுவர் காலாண்டர் வியாபாரி அல்லவே ! இதையும் உங்கள் மதிப்பிற்குரிய முனைவர் திரு. நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் சொல்லிகொடுத்தாரா ?
நீ படிச்ச ஸ்கூலே நான் பெரிய வாத்தியாரு பூச்சுமணி! ரெண்டு நாளு இந்த பக்கட்டு வரமுடியலை…சரி அதை விடு.நீ சொன்ன அந்த காலெண்டர்கள் வயசு என்ன? எங்கள் இரண்டம் சங்க கால பதிவுகளுக்கு வயசு என்ன? இதுலே இருந்து என்ன தெரியுது? நீ pizza hut delivery க்கு மட்டுந்தான் லாயக்கி!
ஆதாரங்களை வெளியிடுங்கள் …. நானும் வெளியிடுறேன் ….. என் கிடடயாச்சும் ஏதோ இருக்கு, உன் கிடட என்ன இருக்கு ?
WE DON CELEBRATE PONGAL , BUT WE EAT PONGA SORU ,வி டோன்ட் செலெப்ராட்பொங்கல் பட் வி ஈட் பொங்க சோறு , என்று சொல்லும் தமிழனும் இந்த மலையக மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான் . பழைய புராணம் பாடி கொண்டிருப்பதில் எந்த பலனும் விளையப்போவதில்லை ! பல தேவாலயங்களில் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் கொண்டாடப்பட்டு பொங்க சோரும் சாப்பிட்டார்கள் , சீனர்களும் ,சபா ,சரவாக் , இந்தோனேஷியா கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டது சிறப்பு ! பொங்கல் மதம் , இனம்,
தாண்டி தமிழர் திருநாளாக இந்த மண்ணில் நிலைத்து இருக்கட்டும் ! மத சாயம் பூசி பிரிவினை பேசி தமிழனை பிளவு படுத்தாமல் இருந்தால் சரி !!
Johor மாசாய் கோவிலில் கிருத்துவ மக்கள் ஒரு நாள் தமிழ் பாரம்பரிய விளையாட்டுடன் , கலைநிகழ்ச்சிகள் நடத்தி பொங்கல் வைத்து தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்கள்
தெளிவில்லாதவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது
ஐயா மணியம்! இது ஆரம்பம். வருங்காலத்தில் பொங்கல் இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்படும்!
ஐயா kris அவர்களே அந்த தமிழ் கிருத்துவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும். ஆனாலும் பல தமிழ் கிருத்துவர்கள் தமிழ் பாரம்பரியத்தை இழிவாக பேசுவதையும் நான் கேட்டிருக்கிறேன். எந்த சமயமாக இருந்தாலும் தமிழர் என்ற உணர்வோடு நடந்தால் நம் ஒற்றுமை மேம்படும்.
50 60 களில் பொங்கல் தமிழர் திருநாளுடன் கொண்டாடப்பட்டது – தமிழ் முரசு பத்திரிகையின் சாரங்கபாணி அவர்கள் இதற்காக மிகவும் பாடுபட்டார். முன்பு ஒவ்வொரு தோட்டத்திலும் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது .
பொங்கல் வேறு, வருட பிறப்பு என்பது வேறு. தமிழர் திருநாள் என்பது வேறு. இவர்களுக்கு பிடித்து விட்டதால், நாமும் அதை கொண்டாட வேண்டும். இல்லை என்றால் நாம் தமிழர்கள் அல்ல. திராவிடர்கள் , ஆரியர்கள் அவர்கள் இவர்கள் …… தனிமனித சுதந்திரத்தில் மூக்கை நுழைக்க இவர்களுக்கு தான் எவ்வளவு எவ்வளவு ஆசை ! …. இதில் இந்து கிறிஸ்துவர்கள் அல்லது தமிழ் கிருஸ்துவர்கள் மீது அவதூறு வேறு . என்னமோ இவர்களிடம் குறை இல்லாமல் இருப்பது போல். நம்மை யாரும் குறை சொல்லக்கூடாது என்றால், நாமும் யாரையும் குறை சொல்ல கூடாது …. கவிஞர் கண்ணதாசன் சொல்வார் : “நான் என் மனைவியை அழகானவள் அன்பானவள் என்று சொல்ல எல்லா உரிமையும் எனக்கு உண்டு. ஆனால் அடுத்தவரின் மனைவியை பட்ட்றி விமர்சிக்க எனக்கு எந்த உரிமையும் இல்லை , அருகதையும் இல்லை” அப்படி இருக்கிறது இவர்களின் கதை …… பொங்கல் கொண்டாட ஒரு உழவனாக இருந்தால் போதும். சீனாவிலும் பொங்கல் பண்டிகை உண்டு, காரணம் அங்கேயும் விவசாயம் உண்டு, அவர்களும் பூமிதந்தைக்கும் சூரியதாயிக்கும் மரியாதை செய்யும் நாட்களும் உண்டு. ஆனால் அவர்களிடம் : “வாயிலேயே வடை சுட்டு விற்கும் பழக்க மில்லை”. அப்படியே சுடடாலும் அவர்கள் சுடும் வடையை தான் மற்றவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று வாதிடுவதில்லை……
ஐயா dilip 2 அவர்களே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று முழுமையாக புரிய வில்லை. தனி மனித சுதந்திரம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே– ஆனாலும் அது மனிதாபிமானத்துடன் கடைபிடிக்கவேண்டும் என்பதே என்னுடைய தாழ்வான அபிப்ராயம்.
en thaai thamiz நீங்கள் சொல்லுவது சரிதான். கல்வி அறிவு இல்லாத பல கிறிஸ்துவர்களுக்கு தமிழர் யார் என்றே புரியவில்லை! இந்துக்களைத் தான் அவர்கள் தமிழர்களாக நினைக்கிறார்கள். அப்படி என்றால் தமிழ் கிறிஸ்துவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்பது அவர்களுக்கு இன்னும் தெளிவில்லை! .
பதில் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, அது அறியாமை என்று ஏற்று கொள்ளலாம். ஆனால் கேள்வியே இங்கே பலருக்கு விளங்க வில்லை. என் கேள்வி என்ன வென்றால்: “ஏன் எப்பப்பார்த்தாலும் தமிழர் நாகரிகம் என்று அவர் அவர் மனதிற்கு பிடித்ததை மற்ற சகா தமிழர்கள் மீது திணிக்க பார்க்கிறார்கள் ? ஒரு உதாரணத்திற்கு பொங்கல் என்பது தமிழ் புத்தாண்டாம். நாம் ஏன் சக தமிழர்கள் இப்படி வாழ வேண்டும் என்று வாதிட வேண்டும் ? அவர் அவர் சுதந்திரத்தில் நாம் என் மூக்கை நுழைக்க வேண்டும் ? முதலில் அதை விளக்குங்கள் ! உழவு காலம் முடிந்து, இப்பொழுது நாம் அறிவியலில் வளர்ச்சி காலத்தில் இருக்கிறோம். இருந்தும், பொங்கல் எல்லோரும் கொண்டாட வேண்டும், அதுவும் தமிழர்களின் வருட பிறப்பாம். 1921 ஆண்டு பச்சயப்ப கல்லூரி முடிவெடுத்ததனால், மற்றவர்களும் அதை ஏற்று கொள்ள வேண்டும் என்று வாதிடும் அறிவு கொழுந்துகளா, அது என்ன சடட மன்றமா ? சடடம் இயற்ற ! ஆ வு நா ஜப்பான்-ல ஜாக்கி சான் தெரியும், அமெரிக்காவில் அர்னோல்ட தெரியும் , இந்தியாவில இளையராஜாவை தெரியும்னு சொல்பவர்களே , முதலில் நாட்கள் எப்படி ஆரம்பிக்கிறது, பிறகு மாதங்கள் எப்படி வேறு படடன, சூரிய சந்திர ஆண்டுகள் எப்படி பிறந்தன , கடைசியாக ஜோகேரியன் காலண்டர் எந்த ஆண்டு முடிந்தது என்று தெரிந்து கொண்டு, பிறகு சொல்லுங்கள் எப்படி திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிட படுகிறது என்று. குருடன் குருடனுக்கு எப்படி தான் வழிகாட்டுவானோ ?