மலேசியத் தமிழர்ளுக்கு இரு மொழி சிக்கல் தீருமுன் தமிழக பசும்பாலுக்கு சிக்கல். இது காளைக்கு வந்த வினை அல்ல பசுவுக்கும்
பக்கத்தில் அடி என்பதுதான் உண்மை.
ஞாயிற்றுக்கிழமை 22 /1 மாலை 5 மணிக்கு பிரிக்பீல்ஸ் மையத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அறப்பணி பேரணியில் சுத்த தமிழன் மட்டும் கலந்து ஆதரவு தர அன்புடன் அழைக்கிறோம்.
இது தமிழ் நாட்டின் போராட்டமல்ல உலகத் தமிழர்களின் உளவியல் போராட்டம். மரபணு உறவின் மலைநாட்டில் வாழும் தமிழா வணக்கம்.
இன்று தமிழக இளைஞர்கள், யுவதிகள், தமிழர்கள் வீரம் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எதிர்க்கும் பங்கு நம் தமிழர்களின் இதயத்தை தொட ஓடி வாருங்கள் என்ற இறையோசை நம்மையும் எழவைத்துள்ளது.
தமிழர் நாட்டு பிரச்னை ந்மதில்லை என்ற சுய போக்கால் நாம் இழந்த பெருமைகளை நாம் புரிய வேண்டும்.
உலகம் புகழும் ஒரு தேசிய இனப்பெருமை .உலக தேசிய இனத்தின் வீர கலை நமது ஜல்லிக்கட்டு… அது தமிழனின் வீரம் பொருந்திய பால் தரும் காளையின் விந்து விளையாட்டு என்பதை சுருக்கமா சொல்வோம். இது கதை அல்ல சரித்திரம்
புட்டிப்பாலும் கட்டிப்பாலும் விஷம் கலந்த பாலும் 1 .4 பில்லியன் இந்திய மக்களிடம் சந்தைப்படுத்த ஜல்லிக்கட்டு காளைகளை அழித்து நம் வீரியத்தை மங்கடிக்க அயலானுடன் டெல்லி செய்யும் அட்டூழியம் அடக்க தமிழன் விழித்துகொண்டான், அவன் ஜாலிக்காட்டு வீர விளையாட்டை ஒதுக்கவில்லை தமிழனின் வீர விந்தை கொட்ட தட்டி நம பசுக்களை மலடியாக்க துணிந்து விட்டான்.
பொறுப்பான தமிழன் தாய் பால் இல்லாத போது வீரத்தின் பசும்பால் குடித்தவன் மாட்டின் ஊசி பால் குடிக்க விடுவானா தமிழன். இதுதான் அநியாயத்தின் அடடூழியம் தமிழா !
இந்தியன் அரசியலில் தமிழகத்தில் மறைமுகமாக எதை எதிலோ கை வைத்த நடுவண், வடுவான், பார்ப்பணியான் தமிழன் பசும்பாலில் கை வைக்க விடுவோமா ! தமிழ்த்தாயின் மடியில் கை வைத்தால் தர்மம் தலை எடுக்கும் என்பதை எச்சரிப்போம்.
நமது வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும் நாம்தான் காரணம் என்பதை மாற்றி மாற்றான் தான் காரணம் என்பதை உணர்ந்து வாருங்கள் தமிழா !!!
சல்லிக்கட்டாம் தமிழனின் வீர விளையாட்டில் கை வைத்தால் உன் அரசியல் காய் துண்டு படும்.
மிருக வதை என்று என் தென்னக சுய வீர பாலுக்கு ஆப்பு அடிச்சி அயல் நாட்டு மாட்ட்டுப்பால் விஷப்பாலால் மனித குலத்துக்கு சாவு மணியடிக்க உன் கர்மா காலத்தோடு விளையாட தாயாகிவிட்டது.
மலேசியா தமிழர்களுக்கும் தாய் நாடும் தமிழ்நாடுதான். புகுந்த வீட்டில் நமக்கு ஏதும் ஆகாது என்பது வெட்டி பேசி நம உணர்வின் உணர்ச்சிகளை துண்டடாடாமல் முக்திக்கு சக்தி கொடுக்க வாருங்கள். எல்லாத்தமிழனும் காட்டாயம் வர வேண்டிய ஜல்லிக்கட்டு ஆதரவு
நம உறவின் கடசி ஆத்மா ! ஓம் நமச்சிவாயா !!!
பிரதமர் மோடிக்கு எல்லாம் தெரியும் ஆனால் குஜராத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் இல்லை,, ஆக அதன் வீரம் தெரியாது.
“சோதித்து காளை பிடிப்போம்
சரிபார்த்து பசுவும் தருவோம்
தண்ணிப்பால் நீ தந்தாலும்
எங்கள் சுயப்பால் தாய்ப்பால்தான்
என் சித்தன் தந்த வேதியல்
அச்சம் தவிர் ஆண்மை வெல்”
அதுவே ஜல்லிக்கட்டு போராட்டம்.
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
யாரையும் காணோம் ..அதனால் தேடி எடுத்தக்கட்டுரை,நான் சொன்னால் வம்பு வீரியம் எல்லாம் கிளப்புவீங்க! இப்ப
என்ன வீக்கம் ?
மத்திய ஆட்சியை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ். குழுக்கள்
விவரங்கள்
எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்
தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்
பிரிவு: பெரியார் முழக்கம் – ஜனவரி 2017
வெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2017
மோடி ஆட்சியின் அனைத்து செயல் பாடுகளையும் கண்காணித்து வழி நடத்து வதற்கு ஆர்.எஸ்.எஸ். தனித்தனியான குழுக்களை அமைத்துள்ளது.
சிக்சா ஸான்ஸ்கிருதி உதன் நியாஸ் (SSUN) – கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான அறக்கட்டளை – ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பு. இந்தியா வின் தற்போதைய கல்விக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் 2007ஆம் ஆண்டு முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியரான தயானந்த் பத்ரா என்பவரால் நிறுவப்பட்டது. பாடத் திட்டங்கள், கல்விக் கொள்கைகள் மற்றும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதனை காவி மயமாக்குவதே இதன் வேலை.
இதன் உறுப்பினர்கள் குழு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதிய கல்விக் கொள்கையில் இந்து தேசியத்தை புகுத்துவது தொடர்பான கருத்துகளை முன் வைத்தது. இவர்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்று பிழைகளையும் சுட்டிக் காட்டி யுள்ளார்களாம். அதனை புதிய பாடத் திட்டம் கொண்டு வரும்பொழுது அரசு கவனிக்கும் என்றும் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.
வென்டி தோனிகர் (Wendy Doniger) எழுதிய ‘The Hindus-An Alternative History’ என்ற புத்தகம் தடை செய்யப்படுவதற்கும், டெல்லி பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து ஏ.கே. ராமானுஜம் எழுதிய “முன்னூறு இராமாயணம்” என்ற கட்டுரையை நீக்கியதற்கும் இந்த அமைப்பின் பிரச்சாரம் முக்கிய காரணம்.
இந்த அமைப்பின் கருத்துக்களை ஆளும் பாரதீய ஜனதா கட்சி செவிமடுத்து கேட் கின்றது. முன்பெல்லாம் நமது கோரிக்கைகள் நிறைவேற நீதிமன்றம் செல்ல வேண்டி யிருந்தது. ஆனால் இப்பொழுது அரசு செவி மடுக்கின்றது என்கின்றார் இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் அதுல் கோத்தாரி. முன்பிருந்த வாஜ்பாய் அரசைவிட இன்றைய அரசு ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்து செயல்படுவதில் தடைகளை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆட்சி முறை மற்றும் கலாச்சாரத்தில் நேருவின் வழிமுறையை அகற்றிவிட்டு தனது தடத்தைப் பதிக்கவே மோடி முயன்று கொண்டிருக்கிறார் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவர்.
ஆர்.எஸ்.எஸ். தனது திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசை இயக்கிக் கொண் டிருக்கிறது. கல்வி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதற்கு ஆறு குழுக்களை ஆர்.எஸ்.எஸ். நியமித்துள்ளது. அதன் உறுப்பினர்களாக பா.ஜ.க.வின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.இன் பொதுச் செயலாளரான தத்தத்ரேய ஹோசபலே மற்றும் கிருஷ்ணா கோபால் ஆகியோர் அரசாங்கமும் இந்துத்துவாதிகளும் இணைந்து நடத்தும் பாசறைகளை ஒருங்கிணைக்கின்றனர்.
இந்த ஒருங்கிணைப்பு சந்திப்பில் கூறப்படும் சில கருத்துக்கள் உடனடியாக அமைச்சர் களின் மூலமாக நிறைவேற்றப்படுகின்றன. நிபந்தனைகளுக்கு ஒத்துப்போகும் சில கருத்துக்கள் உடனடியாக செயல்படுத்த முடியாது என்றாலும் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. சாத்திய மில்லாத சில கருத்துகள் ஒதுக்கப்படு கின்றன.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். சமன்வே பைதக் என்ற பெயரில் ஒருங்கிணைப்பு சந்திப்பை நடத்தியது. நோக்கம் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ்.ஆல் கௌரவிக்கப்படும் இந்து தலைவர்களுக்கு முக்கிய பதவிகளைப் பெற்றுத் தருவதே.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மும்பை யில் இராஜேந்திர சோழனின் உருவப்படத்தை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். மஹாரானா பிரதாப், கௌத்தியா வைஷ்நவிசம் நிறுவனர் சைதன்ய மஹா பிரபு, ஜனசங்கின் தீனதயாள் உபாத்யாய ஆகியோரின் பிறந்த நாள்களை பண்பாட்டு அமைச்சகம் தற்போது கொண்டாடி வருகிறது.
பாரதிய சிக்சா மண்டல் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பு. ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலை கல்வி வரை உள்ள பாடத் திட்டங்களில் இந்திய அறிவு பாரம் பரியத்தோடு ஒத்துப் போகும் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந் துள்ளது. எங்களுடைய சில அறிவுரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்கிறார் இதன் இணை ஒருங்கிணைப்பு செயலாளர் முகுல கணித்கர். “முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டி பயிற்சி பட்டறைகளை இதுவரை 26 பல்கலைக்கழகங்களில் நடத்தியுள்ளோம். நாக்பூரில் நடந்த மறுமலர்ச்சிக்கான ஆராய்ச்சி என்ற மாநாட்டில் 55 (பல்கலைக்கழக) துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதன் மூலம் இந்திய அறிவு முறைமை முன்னெடுத்து செல்லப்படும்” என்கிறார் கணித்கர்.
நீதிமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் மற்றும் தொழிற்துறை சார்ந்த கல்லூரிகளிலும் வட்டார மொழிகளோடு இந்தியையும் திணிப்பதே அடுத்தக்கட்ட பணி என்கிறார் கோத்தாரி. பாரதிய சுரக்ஷh மஞ்ச் என்ற அமைப்பு இதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லுமாம். தலித்களிலும் சிந்தனைவாதிகளை வளர்த் தெடுக்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் பெயர் குறிப்பிடும்படி முக்கியமானவர்கள் மிலிந்த் காம்ப்ளே என்பவர் இவர். தலித் இந்தியர் வர்த்தகப் பிரிவு நிறுவனர். மற்றொருவர் நரேந்திர ஜாதவ் – இவர் மத்திய அமைச்சர்.
பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளிலும் வலதுசாரி சிந்தனைகளை பரவலாக்கு கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ராவ் மாதவ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் மகனான சௌர்யா டோவலும் இணைந்து ‘இந்தியா நிறுவனம்’ என்ற ஒன்றை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு, வெளி நாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினை களில் வலதுசாரி சிந்தனைகளை திணிப்பதில் இவர்கள் சூத்திரதாரிகளாக உருவெடுக் கின்றனர்.
“பல்கலைக்கழக மாணவர்கள் வட்டத்தில் வலதுசாரி சிந்தனைவாதிகளை உருவாக்கு வதற்கு, ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு குழுமமும், பாரத் நித்தி என்ற அமைப்பும் ஈடுபடுகிறது. சங்கல்ப் என்ற நிறுவனத்தின் வழியாக 1986லிருந்து இன்று வரை ஆயிரம் மாணவர்களை அரசு ஆட்சிப் பணிகளுக்காக பயிற்சி அளித்து அனுப்பியுள்ளோம்” என்கிறார் கணித்கர்.
பண்பாட்டு துறைகளிலும் ஆலோசனை குழுக்களிலும் இன்று வலதுசாரி சிந்தனை கொண்டவர்களையே காண முடிகிறது. ஆர்.எஸ்.எஸ்சின் கருத்துகளோடு ஒத்துப் போகும் பார்வை உடையவர்களே வரலாற்று ஆய்வு மய்யம், இந்திராகாந்தி தேசிய கலை பண்பாட்டு மய்யம், பிரச்சார் பாரதி தேசிய நினைவு காப்பகம், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு போன்ற அரசு துறைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். தேசத்தின் பெயரால் இந்தியா காவிமயமாகிக் கொண் டிருக்கிறது. அதற்கான வேலை முழு மூச்சாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
(ஆதாரம் : The Week, December 4, 2016)
பெரியாரை சொறியார் சொல்லிவிட்டு அதென்ன தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம் ?
தமிழன் விடுதலை என்று சொன்னாலோ அல்லது பேசினாலோ மற்றொரு தமிழ் இன அழிப்புக்கு சாதி செய்கிறான் என்பது தெரிந்ததுதானே
சீறி வரும் காளையையே எதிர்கொள்ளும் தமிழனுக்கு விடுதலை போர் ஒரு ஜூஜிபி மேட்டர்!
அடிப்படை என்றும் அடிப்படை தான் ,மாற்றத்தின் அடிப்படை சிந்தையாளனின் ,சித்தாந்தங்கள் இல்லாமல் தமிழர்களின் கருத்தாக்கம் அமையுமா ,எழுத்தின் வடிவமே நமக்கு சாட்சியமே , தமிழர்கள் வாழ்வில் பிரிக்க முடியா மாமனிதர்கள் [ பெரியார் என்ற சரித்திரம் ] .