சேவியர்: இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு என்பது பாரிசானின் தேர்தல் யுக்தி என்பதைப் பிரதமரே கூறுகிறார்!

 

 

najibமலேசியர்கள், குறிப்பாக வறுமையிலுள்ள மக்களுக்கு,  அரசாங்க உதவித் திட்டங்கள் என்று வரும்பொழுது  எவரும் கேள்வி எழுப்புவதில்லை. நாட்டிற்கு அன்று செல்வங்களை  அள்ளி வழங்கியது ரப்பர் தொழில், அரசாங்கம் அதன் வருமானத்தில் பெரும்பகுதியை மாரா மற்றும் பெல்டா போன்ற வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவு செய்யும் பொழுது எவரும் கேள்வி எழுப்பவில்லை. அதனை  அமல்படுத்தும் போது பல குறைநிறைகளை நாடும் மக்களும் சந்தித்தபொழுதும் அதனை அரசாங்கம் கைவிடவில்லை.

 

ஆனால், பத்து ஆண்டுகளுக்கு இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு என்ற சித்திரத்தை மட்டும் காட்டிவிட்டு, அதற்காக, எந்தச் சிறப்பு அடித்தளத்தையும் அமைக்காமல், வரும் தேர்தலில் பாரிசான் தேர்தல் வெற்றியைப் பொருத்தே இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு அமையும் என்று பிரதமர் நஜிப், பேராக், செலாமாவில் பல்டி அடித்திருப்பது அவரின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

 

பேராக், செலாமாவில் இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்ட வரைவு குறித்துப் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து இந்தியர்களை ஓட்டுக்கு மிரட்டினாரா? இல்லை, இவர் அறிவிப்பில் சமுதாயம் படுகுதூகலத்தில்  இருப்பதாக எண்ணிக் கொண்டுள்ளாரா என்ற கேள்வியையும்  எழுப்பியுள்ளது என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இந்த மேம்பாட்டு திட்டவரைவு அரசாங்கத்தின் செயல் திட்ட வரைவு அல்ல, பொதுத் தேர்தலை மையமாகக் கொண்ட பாரிசானின் திட்டவரைவு என்பதையும் பிரதமரே ஒப்புக்கொள்ளுவதையும் அது காட்டுகிறது. அது வெறும்  அரசியல் கண்துடைப்பு மட்டுந்தான் என்பதை நாட்டுக்கு  நிரூபிப்பதாக உள்ளது.

மலேசியப் பிரதமர் நஜிப்பின் இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்ட வரைவு என்ற அழகிய சித்திரத்தைக் குழந்தைகளின் கண் முன்னே வைத்து, இது உன் பள்ளிக்கூடம் நீ கல்வி கற்க, அதில் உள்ள பழம் உன் பசி தீர்க்க, அதில்  இருக்கும் கோபுரந்தான் உனது மாளிகை, அடுத்தது உனது தலைமுறையின் முன்னேற்றச் சின்னம் என்று குழந்தைகளுக்கு காட்டும் படம் கல்வியைத் தருவதில்லை, பசியைத் தீர்ப்பதில்லை.

 

ஆனால். ஏட்டுச்சுரைக்காய் கரிக்கு உதவாது என்று பாடத்தினை நமது பாட்டிமார்கள் எப்பொழுதோ நமக்குப் பாடமாகப் புகட்டிவிட்டார்கள் என்பத நஜிப் அறியமாட்டார் என்கிறார் சேவியர் ஜெயக்குமார். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இந்தியர்களுக்கு  உற்சாகமூட்டப் பல அசகாய வாக்குறுதிகளுடன்  அதாவது ஏப்ரல் 1ல் இந்தியாவிலும் அடுத்தக்கட்டமாக கடந்த மே மாதத்தில் சில மில்லியன் ரீங்கிட்டையும் ஒதுக்கி ,அடையாளப் பத்திரவிவகாரத்தையும் இணைத்துக் கோலாலம்பூரிலும் இந்தியர்களின் மேம்பாடு திட்ட வரைவு என ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றி ம.இ.காவினரைப்  பரவசப் படுத்தினார் பிரதமர்

 

ஆனால், எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு முன் மாநில அளவிலான பிரச்சாரங்களின் ஒரு பகுதியாக இம்மாதம் 7 ந்தேதி  பேராக், xavierசெலாமாவிற்கு வருகைபுரிந்த பிரதமர் இந்தியர்களை மிரட்டும் விதமாகப் பேசியுள்ளார். பேராக் இந்தியர்களை மிரட்டித்தான் ஓட்டு வாங்க முடியும் என்று எண்ணுகிறாரா, இல்லை ஒட்டுமொத்த இந்தியர்களும், இவர் வாக்களித்த ” மேம்பாட்டு திட்டவரைவு”  என்பது வெறும் காணல் நீரே என்பதை அறிந்து கொண்டு, அடுத்தகட்டப் புரட்டலுக்கு அடித்தளமிடுகிறாரா பிரதமர் என்று கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமா.ர்.

 

நாம் முன்னரே கூறியது போல், நஜிப் திட்டம் நேர்மையற்றது, அவர் ஒரு வாய்ச்சொல் அசகாய சூரன் என்பதை 1 எம்டிபி விவகாரத்தில் உலகமே உணரந்துவிட்டது, இந்தியச் சமுதாயமும் உணர்த்து வருகிறது என்றாரவர்.

 

பேராக், செலாமாவில் இந்தியர்களுக்கான பொருளாதாரத் திட்ட வரைவின் வெற்றித்தோல்வி  வரும் தேர்தலில் பாரிசான் தேர்தல் வெற்றியைப் பொருத்து அமையும் என்று பிரதமர் ஏன் கூற வேண்டும்? அப்படிக் கூறியிருப்பது. இவர் அரசாங்கத்தின் பெயரில் இந்தியர்களுக்கு அரசியல் வாக்குறுதியை மட்டுமே வழங்கியுள்ளார், அது அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பின் எந்த ஆட்சி வந்தாலும்  அரசாங்கக் கொள்கைகள் மாறாது என்ற ஆணித்தரமான தர்க்க நியாயங்களைக்கூட உணரமுடியாத இனமென இந்தியர்களைப் பிரதமர் குறைத்து இடை போடுவதைத்தானே காட்டுகிறது!

 

இவர் பதவிக்காலத்தில் உயர் கல்விக்கூடங்களில் தமிழ், தமிழ் இலக்கியப் பாடங்கள், தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சிக்கு அளித்த வாக்குறுதி, பள்ளி மானியங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும், வழங்கிய மானியத்திற்கும்  இடையே நிலவும் பெரிய  இடைவெளி. இந்தியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தெக்குன் கடனுதவி, டாக்சி ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட கடன் மற்றும் உரிமத்திற்கான உத்தரவாதம், இந்திய டாக்சி ஓட்டுனர்களுக்கு மலிவு விலை வீடு, இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளில்  7.5 விழுக்காடு, நாட்டின் பொருளாதாரத்தில் 3 விழுக்காடு, இந்தியர்களின் பங்குரிமை,  போன்று பல விவகாரங்களுக்குப் பதிலளிக்கப் பிரதமர் கடமைப்பட்டுள்ளார்

 

குறிப்பாக, மலேசியாவின் 13 வது பொதுத் தேர்தலுக்குமுன் பிரதமர் அறிவித்த இந்தியர்கள் மேம்பாட்டு திட்ட வரைவு என்ன ஆனது? ஹிண்ட்ராப் வேதமூர்த்தியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்தான் என்ன ஆனது? இவை அனைத்தும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.