ஐஜிபி: டிஓஜே ‘சிவில் வழக்கில்’ போலீஸ் தலையிடாது

igp1எம்டிபி-யில்   கையாடப்பட்டதாகக்   கூறப்படும்     பணத்தில்    வாங்கிய    சொத்துகள்   தொடர்பாக    அமெரிக்காவின்   நீதித்துறை   தொடுத்துள்ள   சிவில்   வழக்கில்    போலீஸ்   தலையிடாது    என்பதை     இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்  இன்று   மீண்டும்   வலியுறுத்தினார்.

“சிவில்   வழக்கு   என்றால்   போலீஸ்    தலையிடாது.

“இது  சிவில்   விவகாரம்,  அதனால்   (எப்பிஐ-யுடன்   ஒத்துழைப்பு)  இல்லை”,  என    புக்கிட்        அமானில்   செய்தியாளர்   கூட்டத்தில்   காலிட்   கூறினார். அவ்வழக்கில்   அமெரிக்க  மத்திய   புலனாய்வுத்   துறை(எப்பிஐ)யுடன்  மலேசிய    போலீஸ்    ஒத்துழைக்குமா     என்ற   கேள்விக்கு    அவர்  இவ்வாறு   பதிலளித்தார்.