மியான்மரின் ராகைன் மாகாணத்தில் பெருமளவிலான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய விவகாரத்தில், அந்த மாகாணத்தை நேரில் பார்ப்பதற்காக ஐ.நா. மன்றம் மேற்கொண்டிருந்த திட்டத்தை மியான்மர் அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வன்முறை தொடங்கிய பிறகு, முதல் முறையாக அப்பகுதியை பார்வையிட ஐநா திட்டமிட்டிருந்தது.
ரோஹிஞ்சா போராளிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கிய பிறகு, மியான்மர் ராணுவம் ரோஹிஞ்சாக்கள் மீது தாக்குதலை தொடங்கியபோது, அங்கிருந்து ஐ.நா.வின் பார்வையாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள்.
யங்கோனில் உள்ள ஐ.நா செய்தித்தொடர்பாளர் ஒருவர், மியான்மர் அரசாங்கம் வெளியேறுவதற்கான காரணத்தை அளிக்கவில்லை என்று கூறினார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 400,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வங்காகதேசத்திற்கு குடிபெயர்ந்ததற்கான காரணம் குறித்து புலன் விசாரணை நடத்துவதற்காக ராகைன் மாகாணத்திற்கு செல்ல ஐ.நா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
புத்த பிக்குகளால் ஆதரிக்கப்பட்ட மியான்மர் ராணுவம் நடத்திய அடித்து துன்புறுத்தல், கொலை செய்தல் மற்றும் கிராமங்களை கொளுத்துதல் போன்ற தாக்குதலினால் ரோஹிஞ்சாக்கள் எல்லைத் தாண்டி தப்பிச் செல்ல நேரிட்டது.
பத்திரிகையாளர்களிடமிருந்து கிடைத்த படங்கள் மற்றும் தகவல்களானது பல கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால், ராணுவமோ தாங்கள் போராளிகளை மட்டுமே தாக்குவதாக கூறுகிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் ரோஹிஞ்சா போராளிகளால் கொல்லப்பட்ட 45 ஹிந்துக்களின் சடலங்கள் பிணக் குவியலாக கண்டறியப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
ராகைனில் கடும் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு உள்ள களநிலவரத்தை அறிவது கடினமாக உள்ளது.
ஆனால் மனித உரிமை பாதுகாப்பு குழுக்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றவர்கள் தவிர, பல மக்கள் ராகைனுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
பெரும்பாலும் முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சாக்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு, அவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றனர்.
புத்தர்களே அதிகமாக உள்ள ராகைன் மாகாணத்தில், இதற்கு முன்னர் பலமுறை வன்முறைகள் வெடித்துள்ளன.
ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்க இருந்த இந்தப் பயணமானது அந்த பகுதிகளுக்கு முதல் முறையாக செல்லவிருக்கும் சுதந்திரமான மற்றும் பரந்த வாய்ப்பாக அமையுமென்று நம்புவதாக இந்த பயணம் ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த புதன் கிழமையன்று பேசிய ஐநாவின் செய்தித்தொடர்பாளர் ஸ்டிபன் டுஜாரிக் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் வியாழக்கிழமை பிற்பகுதியில் கூடவுள்ளது.
இந்த நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதத்தினால் மியான்மரின் பிரதமர் ஆங் சான் சூச்சி பன்னாட்டளவில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் ஆங் சான் சூச்சியை வியாழக்கிழமை அன்று சந்தித்த இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை அலுவலக அமைச்சர் மார்க் பீல்ட் ராகைனில் நிலவும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார். -BBC_Tamil
மனிதம் செத்துவிட்டது, மதம் மனிதனை கொன்று குவிக்கிறது !”அறியாமை”யில் உழலும் அகங்கார உலகம் அழிவை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருக்கிறது
மனிதம் செத்துவிட்டது, மதம் மனிதனை கொன்றுக் குவிக்கிறது ! “அறியாமை”யில் உழலும் அகங்கார உலகம் அழிவை நோக்கி விரைந்து போய்க்கொண்டிருக்கிறது. அறியாமை இருளிலிருந்து என்று விடியல் காண்கிறோமோ அன்றுதான் இந்த பூமி ஒரு சொர்க்கபுரியாக விளங்கும். அந்தநாள் எப்போது வரும் ? வருமா !
நாம் தான் மனிதம்/மனிதாபிமானம் பற்றி பேசுகிறோம்–ஆனால் OIC என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது? ஒரு துரும்பை கூட நகர்த்தாத ஈனங்கள்- இந்த நாட்டில் அவன்கள் துணி துவைக்கும் எந்திரங்களில் அவன்கள் அல்லாதவர்கள் துணி துவைக்க கூடாதாம்– இதெல்லாம் பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகுமா? பேசவே எரிகிறது– எந்த அநியாயமும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்– ஆனால் தற்போது இவ்வுலகில் யாரால் இவ்வளவு தொல்லைகளும் கஷ்டங்களும்? இது 1967 ல் ஆரம்பிக்கப்பட்டது — அக்காலகட்டத்தில் சுபாங் விமான நிலையத்தில் காவல் கிடையாது. இப்போது நடக்கும் பரிசோதனைகளும் கிடையாது– இப்போது இவ்வளவும் யாரால் ? இன்னும் எவ்வளவோ.
எதெற்கெடுத்தாலும் மனிதம்/மனிதாபிமானம் என்று பேசித்தான் இன்று உலகில் தீவிரவாதம் கொடி கட்டி பறக்க துணை புரிந்துளார்கள்.
தீவிரவாதத்தினால் பாதிக்கபட்டோர் உடம்பில் இருந்து வருவது தண்ணீர் மாதிரியும்,
தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதிகளை கொன்றால் அவர்கள் உடம்பில் இருந்து வருவது இரத்தம் மாதிரியும் நினைப்பு.
உலகில் மற்ற நாடுகளைவிட மலேசியாவில் இந்த நினைப்பு அதிகம்.
பயங்கரவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் நாடுகளின் கூட்டமைப்புதான் இந்த OIC.
தங்கள் இனம் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் பயங்கரவாத/தீவிரவாத செயல்களை செய்யும்படி தூண்டி விட்டு OIC என வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் வேலை.
முஸ்லீம்கள் துணி துவைக்கும் எந்திரங்களில் முஸ்லீம் அல்லாதவர்கள் துணி துவைக்க கூடாது என்றால்
மாமா உணவகங்களில் முஸ்லீம் அல்லாதவர்களும் சாப்பிடுகிறார்களே அப்படியானால் அவர்கள் உபயோகபடுத்தும் தட்டு-கரண்டி போன்றவற்றை முஸ்லீம்களும் பயன்படுத்துகிறார்களே
இதற்கும் முஸ்லிம்களென்று தனி தட்டு-கரண்டி வேண்டும் என்று கோரிக்கை வைக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது.