நாமே தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாக கைவிடுவதற்கு எமது தலைமைகள் முன்வந்தமையே கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் போரில் வென்றார்கள். எனவே எமக்கு எமது சட்டரீதியான நியாயமானகோரிக்கைகளை அதன்பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்மவர் நினைத்தால் அது முற்றிலும் தவறானதாகும்.
தமிழ் மக்கள் போரில் தோல்வியடையவில்லை. இன்றைய தமிழ் தலைமைத்துவம் நாம் தோற்றுவிட்டோம் என்ற மனப்பாங்கில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கவும் ஒற்றையாட்சியின் கீழ் சிங்கள பேரினவாதத்திற்கு இடம் கொடுக்கவும் வடக்கு, கிழக்கை இணைக்காது விடுவதற்கு தயார் என்றும் தன்னாட்சி தாயகம் போன்ற கோரிக்கைகளை கைவிட்டு சமஷ்டி சாத்தியமில்லை என்று கூறி ஒருசில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் செயற்படுவதனால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பிளவு ஏற்படப்பார்க்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சி தேர்தலை தமிழ் பிரதேசங் களில் மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் இது சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோ நிலையை அறியும் ஒரு கைங்கரியம் என சிலரால் கூறப்படுகின்றதே என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அரசாங்கம் சிங்களப் பிரதேசங்களில் தேர்தலை நடாத்தப் பின் நிற்கின்றது. எங்கேதமது பொருளாதாரக் கொள்கைகளும் தமிழர் சம்பந்தமான உத்தேச அரசியல் தீர்வுகளும் சிங்களமக்களிடையே தமக்கெதிரான ஒரு அலையை உண்டு பண்ணி விடுமோ என்று பயப்படுகின்றது. எனவேமுதலில் தமிழ் மக்களின் கருத்தைஅறியப்பார்க்கும் ஒருநிகழ்வாக இந்த உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறலாம். அதாவது பௌத்தத்திற்கு முதலிடம்,சமஷ்டி தேவையில்லை,ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பரவலாக்கம் என்றகொள்கையுடைய தற்போதைய தமிழ்த் தலைமைத்துவத்தின் கருத்தைதமிழ் மக்கள் வரவேற்பார்களானால் சிங்கள மக்களுக்குஅதைஎடுத்துக்காட்டி புதியஅரசியல் யாப்பைத் தாம் நினைக்கும் வண்ணம் பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கக்கூடும். ஆகவே தற்போதைய தமிழ்த் தலைமைகளின் கருத்துக்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு பெருவாரியாக அக் கருத்துக்களை ஆதரித்தால் மிகக் குறைவானதீர்வைநாம் விரைவாகப் பெற இடமிருக்கின்றது.
ஆனால் வருங்காலத்தில் தமிழ் மக்களுக்குஎன்னஆகும் என்பதைத் தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஆய்ந்துணரவேண்டும். கிழக்கைப் போல் வடக்கைஆக்குவதற்குஅரசாங்கத்திற்குபலவருடங்கள் அப்பொழுதுதேவையில்லை.
சிலகட்சிகளும் தமிழ் மக்களின் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பேசுவதைவைத்துதமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இவர்கள் பிளவைஏற்படுத்தப்பார்க்கின்றார்கள் என்றஒருகருத்துமுன்வைக்கப்படுகிறது. இது எந்தஅளவுக்குஉண்மைஎன்றுஆராய்வோம்.
தமிழ் மக்களின் கொள்கைகளில், நோக்கில்,முன்னேற்பாடுகளில்ஒருபுரிந்துணர்வும் ஸ்திரத் தன்மையும் இருக்க வேண்டும் என்றுதான் தந்தைசெல்வாகாலத்திலேயேசிலஅடிப்படைகள் வலியுறுத்தப்பட்டன. அவையாவனதாயகம்,தன்னாட்சி,தமிழர் தரையிணைப்புஎன்பன. இதற்கு உகந்ததீர்வு சமஷ்டியே என்று வலியுறுத்தப்பட்டது. இதனை 1949ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சிவலியுறுத்தி வந்துள்ளது. தற்போதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இற்றைவலியுறுத்துகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பலகட்சிகளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினர்களும் ஒருமித்து 1949ஆம் ஆண்டுதொடக்கம் வலியுறுத்தப்பட்டகொள்கைகளையேபின்பற்றவேண்டும் என்றும் அவற்றில் இருந்துபிறழ்வதுதாம் இருந்தகாலத்தில் கட்சிக்காகத் தமது காணி பூமிகளை விற்று வறுமையில் மறைந்த முன்னைய தமிழ்த் தலைவர்களுக்கும் உயிரைப் பணயம் வைத்துஉடலைவருத்திப்போராடியஎமது இளைஞர் சமுதாயத்திற்கும்,போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கும் நாம் செய்யும் துரோகமாக முடியும் என்றுகருத்துத் தெரிவித்துள்ளார் கள்.
இந்தவகையில் தவறுஏற்பட்டுள்ளமைஎங்குஎன்றுபார்த்தால் 2009ஆம் ஆண்டின் பின்னர் போரில் நாங்கள் தோற்றுவிட்டோம் நாம் கோருவதுகிடைக்காது்யதார்த்தஅடிப்படையில் ஏதோசிலசலுகைகளையேநாம் பெற்றுக் கொள்ளமுடியும்என்றமனோபாவம் எம் தலைவர்கள் சிலரிடையேபுகுந்தமையே இதற்கானகாரணம் என்றுஅடையாளம் காணமுடியும். ஆகவேபோரில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் இனிமேல் முன் போல் எமதுகோரிக்கைகளைமுன்வைக்கமுடியாதுஎன்றஒருதோல்விமனப்பான்மையே இச் சிந்தனைக்கானஅடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது.
இந்தவகையில்த்தான் இராணுவத்தினரதும் சிலசிங்களத் தலைவர்களினதும் எண்ணங்களும் இருந்துவருவதைநாம் காணலாம். போரில் நாம் தமிழர்களைவென்றுவிட்டோம். ஆகவேஅவர்களிடம் நாம் பறித்தகாணிகள் யாவும் எமக்குச் சொந்தம். இனித் தமிழர்கள் கோரும் எந்தக் கோரிக்கைகளுக்கும் நாம் செவிசாய்க்கத் தேவையில்லை. நாமாகமனமுவந்துதருவதையேஅவர்கள் ஏற்கவேண்டும்என்றுசிலர் கூறுவதைக் கேட்டுள்ளோம்.
ஓரிருவிடயங்களை நாம் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ஆயுதமேந்தியோர் மத்திய அரசைப் பிடிக்க எத்தனிக்கவில்லை. தாம் வாழ்ந்த இடங்களில் அரசை நிறுவவே முயன்றனர். போர் நடந்தகாலத்தில் மத்தியஅரசாங்க அதிகாரம் தொடர்ந்து வடக்குக் கிழக்கில் கோலோச்சியமையாவர்க்கும் நினைவிருக்கலாம். அரசஅலுவலர்கள் மத்தியஅரசாங்கத்தாலேயேசம்பளம் கொடுக்கப்பட்டார்கள். மத்தியஅரசின் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்தினார்கள். ஆகவேபோர் என்று கூறியது இரு இனங்களுக்கிடையேயான போர் அல்ல. அது அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெற்ற ஒன்று. முன்னர் பழைய ஜே.வி.பி காலத்திலும் அப்படித்தான். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி க்கும் இடையிலேயேபோர் நடைபெற்றது.
எனவே விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வி.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழியயுத்தம் அல்ல. அரசாங்கத்தின் அதிகாரம் தொடர்ந்து வடக்கிலும் தெற்கிலும் அந்தந்தக் காலத்தில் தொடர்ந்து இருந்ததால் கிளர்ச்சிகளை யுத்தம் என்றுஅடையாளப்படுத்தமுடியாது. ஆகவேகிளர்ச்சிமுடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். அவர்கள்கையேற்ற காணிகள் உரியவர்களிடம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் அவர்களால் அன்றிசிவில் அரசாங்கஅதிகாரிகள் மூலமாகக் சேர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தின் எதிர்பார்ப்பு.போர்க் காலத்தில் கையகப்படுத்திய காணிகளைதொடர்ந்து எட்டு வருடங்களுக்கு வைத்துக் கொண்டுவிட்டுஅவைஎம்முடையவைஎன்று கூற இராணுவத்தினருக்கு சட்டத்தில் இடமில்லை.
ஆகவே இராணுவத்தினர் போரில் வென்றார்கள் எனவேஎமக்கு எமதுசட்டரீதியான நியாயமான கோரிக்கைகளை அதன் பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்தவிதஉரித்தும் இல்லைஎன்று எம்மவர் நினைத்தால் அதுமுற்றிலுந்தவறான சிந்தனையாகும். தமிழ் மக்கள் போரில் தோல்வி அடையவில்லை. அவர்கள் அன்றும் இன்றும் இந்தநாட்டின் ஒருஅங்கமே. அவர்களின் சட்டரீதியான உரிமைகளைத் திருப்பிக் கேட்க எத்தருணத்திலும் அவர்களுக்கு உரித்துண்டு.
இன்றைய தமிழ்த் தலைமைத்துவம் தோற்று விட்டோம் என்ற மனப்பாங்கில் பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கநாம் தயார், ஒற்றையாட்சியின் கீழ் சிங்களப் பேரினவாதத்துக்கு தொடர்ந்து இடம் கொடுக்க
நாம் தயார், வடகிழக்கை இணைக்காது விடநாம் தயார் தன்னாட்சி, தாயகம் போன்றகோரிக்கைகளைக் கைவிடத் தயார், சமஷ்டி முறை சாத்தியம் இல்லை என்று கூறி ஒருசில சலுகைகளை மட்டும் பெறும் வகையில் நடந்து கொள்வதால்த்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படப் பார்க்கின்றது. அதாவது நாமாகவே வலிந்து தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாகக் கைவிட எமது தலைமைகள் முன்வந்தமையே பிளவுஏற்பட ஏதுவாக இருக்கின்றது.
பெரும்பான்மையான தமிழ்க்கட்சிகள் யாவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டிய கருத்தையேதாம் கொண்டுள்ளன. ஆகவே அந்தக் கொள்கைகளில் மாற்றமேதும் இல்லைஎன்றுதமிழ்த் தலைமைத்துவத்தால் உறுதியுடனும் நேர்மையுடனும் கூறமுடிந்தால் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு தொடர்ந்தும் வலுவான ஒரு அரசியல் கட்சியாகமுன்னேற முடியும். அவ்வாறில் லாமல் குறைந்ததைப் பெறு வதே உசிதம் என்றுஎமது தொடர் அடிப் படைக் கருத்துக்களை உதாசீனம் செய்தால் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவ்வாறான குறைந்தபட்ச தீர்வுக ளுக்கு இவ்வளவு தியாகங்களின் பின்னரும் எம்மவர்கள் உள்ளூராட்சித் தேர்தல்களின் போதுசம்மதம் தெரிவிப்பார்களானால் அரசாங்கம் தான் நினைத்தவாறு சிலசலுகை
களைஎம் மீது திணித்துவிட்டு எமதுநீண்ட கால அரசியல் பிரச்சினையை மழுங்கடிக்க அது அனுசரணையாக அமையும். அத்துடன் வட மாகாணமும் கிழக்குமாகாணம் போல் பறிபோய்விடும்.
உண்மையில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வடகிழக்கில் மட்டும் வைக்க அரசாங்கம் முன்வருமானால் அது தமிழ் மக்களின் நாடி பிடித்துப்பார்க்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். எனவே மக்கள் விழிப்பாக இருத்தல் அவசியம்.
-athirvu.com