யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் வீட்டில் இளைஞர்களால் இன்று அதிகாலை கேக் வெட்டி பிறந்த தின கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் கேக் வெட்டி, பிரபாகரனின் பிறந்த தினத்தை மாணவர்கள் கொண்டாடியுள்ளார்கள்.
மேலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டில் இன்று வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.com